தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் அடுத்து இயக்கியுள்ள படம் சுவாதி கொலை வழக்கு.
இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது…
“மக்களுக்கு எதாவது சொல்லணும், அவங்களை சிந்திக்க வைக்கிற மாதிரியான படங்கள் எடுக்கிறதுக்கு ஒரு தைரியம் வேண்டும்.
சுவாதி கொலை வழக்கை பற்றிப் யாரும் பேசக்கூட முடியவில்லை.
உண்மைகள் தெரிஞ்சாகூட வெளியே சொல்ல மாட்டோம்.
ஆனால் இவர் இந்தப் படத்தில் சொல்லவிருக்கிற விஷயத்தைப் பார்க்க நான் காத்திருக்க தொடங்கிவிட்டேன்.
பட ரிலீஸ் தேதியை முன்னாடியே சொல்லிடுங்க. உங்க கூட இருந்து நானே பிஸினஸ் செய்து கொடுக்குறேன்.
விநியோகஸ்தரிடம் கமிஷனுக்குக் கொடுத்து ஏமாற வேண்டாம். அவர்கள் தேவையற்றவர்கள்.
தியேட்டரில் சினிமா திரையிடுவது மட்டுமே வருமானம் கிடையாது.
சினிமாவில் சம்பாதிக்க நிறைய இருக்கு. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம்.” என்று பேசினார் விஷால்.
Vishal speech at Swathi Kolai vazhakku movie audio launch