சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு விஷால் விடுத்த வேண்டுகோள்

Vishal speech at neruppuda audio launch about movie reviewersவிக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.

நிக்கிகல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார், விஷால், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விஷால் பேசும்போது…

‘ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால், அதற்கு 3 நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள்.

இப்பொழுது எல்லாம் படங்கள் 3 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயமாக மாறிவிட்டது.

ஒருசில விமர்சகர்கள் தங்களுடைய சொந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தை போல் தெரிவிக்கின்றனர்.

படம் வந்த அன்றே விமர்சனம் வந்துவிடுவதால், படத்தின் வசூல் முழுமையாக பாதிக்கிறது.

இதை நான் ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவராக, ஒரு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, ஒரு நடிகராக, ஒரு மனிதராக உங்கள் முன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார் விஷால்.

Vishal speech at neruppuda audio launch about movie reviewers

Overall Rating : Not available

Related News

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள…
...Read More
விக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள…
...Read More
தமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும்…
...Read More

Latest Post