ரஜினி இல்லேன்னா விஜய்-அஜித் ஓகே சொல்வார்களா?

ரஜினி இல்லேன்னா விஜய்-அஜித் ஓகே சொல்வார்களா?

rajinikanth vijay ajithசிவாஜி கணேசனின் பேரனும் பிரபல நடிகருமான விக்ரம் பிரபு, தயாரித்து நடிக்கும் படம் நெருப்புடா.

தன் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் மற்றும் சந்திரா ஆர்ட்ஸ், சினி இன்னோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் விக்ரம் பிரபு.

இவருடன் நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், “நான் கடவுள்” ராஜேந்திரன், “ஆடுகளம்” நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அசோக் குமார் இப்படத்தை இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திலுள்ள ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வேளை அவர் மறுக்கும் பட்சத்தில் விஜய் அல்லது அஜித்தை நடிக்க வைக்க முயற்சிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.’ – விஜய்சேதுபதி

‘காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.’ – விஜய்சேதுபதி

vijay sethupathiதமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்று வருகிறது.

தமிழக வாகனங்கள், மற்றும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு வாட்ஸ்அப்பில் பதிவில் கூறியுள்ளதாவது…

“தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அப்பாவி மக்களை அடிக்காதீர்கள். அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.

உங்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் கூறுங்கள்.

நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை பேசி தீர்ப்பார்கள்.

நாம் இன்று உழைத்தால்தான் நம்மால் சாப்பிட முடியும்.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

ஜோதிகாவுக்கு பைக் ஓட்டக் கற்றுத்தரும் சூர்யா; கணவன்டா..!

ஜோதிகாவுக்கு பைக் ஓட்டக் கற்றுத்தரும் சூர்யா; கணவன்டா..!

suriya and jyothikaவசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடித்தனர் சூர்யா-ஜோதிகா.

இதனைத் தொடர்ந்து காக்க காக்க உள்ளிட்ட படங்களில் நடித்து, தங்களின் காதலை வளர்த்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் ரீ-எண்ட்ரி ஆன ஜோதிகா, தற்போது குற்றம் கடிதம் படப்புகழ் பிரம்மா இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத் தருகிறார் சூர்யா.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

‘என்னையும் நீக்கீடுங்க…’ விஷால்-கார்த்தி மீது ராதிகா சாடல்

‘என்னையும் நீக்கீடுங்க…’ விஷால்-கார்த்தி மீது ராதிகா சாடல்

radhika sarathkumarநடிகர் சங்க செயற்குழு கூட்டம் அண்மையில் நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் நிர்வாகிகளான தலைவர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சொத்து முறைகேடுகளுக்கு உரிய பதில் தராததால் அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“நடிகர் சங்கத்தில் சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது. முதலில் 100 கோடி ஊழல் என்றார்கள்.

தற்போது வேறு தொகையை பற்றி சொல்கிறார்கள். எந்த விளக்கமும் கேட்கப்படமால், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் நான் கேள்வி கேட்பதால் என்னையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்” என விஷால்-கார்த்தியிடம் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கி கொள்கிறாரா சூர்யா?

பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கி கொள்கிறாரா சூர்யா?

suriyaபுதுப்படங்கள் ரிலீஸ் இல்லாமல் தீபாவளி இனிக்குமா?

எனவே ரசிகர்களுக்கு விருந்தளிக்க தற்போதே அரை டஜன் படங்கள் தயாராக இருக்கின்றன.

சூர்யா நடித்த எஸ் 3 (சிங்கம் 3), கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, தனுஷ் நடித்த கொடி, ஜிவி. பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு மற்றும் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் ஆகிய படங்கள்தான் அவை.

இதில் சூர்யாவும் கார்த்தியும் அண்ணன்-தம்பி என்பதால் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் சரி வருமா? என சூர்யா தரப்பு தயங்குகிறதாம்.

ஒருவேளை ஒரு படத்தின் வெற்றி, மற்ற படத்தை பாதித்தால், அதை ரசிகர்களும் விமர்சகர்களும் வேறு மாதிரியாக ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும்.

எனவே, தீபாவளிக்கு பிறகு, நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ரஜினி-அஜித்துக்கு பதில் கமல் முந்திக் கொண்டாரோ?

ரஜினி-அஜித்துக்கு பதில் கமல் முந்திக் கொண்டாரோ?

kamalhassanபிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் அண்மையில் வெளியானது.

சைக்கோ த்ரில்லர் படமான இதில் கண் பார்வையற்றவராக மிக அருமையாக நடித்திருக்கிறார் மோகன்லால்.

எனவே இப்படம் வெளியாகும் முன்னரே ரஜினிக்கு சிறப்பு காட்சியாக இடப்பட்டது.

மேலும் அஜித்துக்கும் இதன் சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து கமலும் இப்படத்தை பார்த்துவிட்டாராம்.

எனவே இயக்குனரையும் நடிகரையும் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

மேலும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியும் அஜித்தும் மௌனம் காத்த நிலையில், கமல் முந்திக் கொண்டார் என்றே தெரிகிறது.

இதன் அதிகாரப்பூர்வ தகவலுக்கு இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.

More Articles
Follows