கட்அவுட் வேணாம்.; ஆனா கம்முன்னு இருக்காதீங்க.. – விஷால் வேண்டுகோள்

Vishal request his fans do not keep any banners on Action releaseசில நாட்களுக்கு முன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் மரணமடைந்தார்.

இதனையடுத்து சினிமா ரசிகர்கள் பலரும் தங்கள் நடிகரின் படம் ரிலீசின் போது பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

யாருக்கு என்ன நடந்தால் என்ன? என்று அரசியல்வாதிகள் பேனர்களை வைத்துக் கொண்டு இருப்பது வேறு கதை.

இந்த நிலையில் வருகிற நவ. 15ஆம் தேதி சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் தமன்னா இணைந்துள்ள ஆக்சன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தன் ரசிகர்களுக்கு விஷால் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அதில் … ஆக்சன் படம் வெளியாகும்போது பேனர்கள், கட் அவுட்கள், தோரணங்கள் வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். அதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Vishal request his fans do not keep any banners on Action release

Overall Rating : Not available

Latest Post