தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட நடிகர் விஷால் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் சில காரணங்களால் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.
எனவே விஷால் இதுதொடர்பாக முறையீடு செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சற்றுமுன் சந்தித்தார்.
அப்போது தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை அவரிடம் விளக்கியுள்ளார்.
முதலில் வேட்பு மனுவை ஏற்றதாக அதிகாரி அறிவித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் அவர் ராஜேஷ் லக்கானியிடம் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக லக்கானியிடம் விஷால் புகார் அளித்துள்ளார்.
Vishal met TN election commissioner Rajesh Lakhani to discuss his rejection of Nomination