தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2010ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் வெளியான படம் களவாணி.
சற்குணம் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த கூட்டணி 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளது.
இப்படத்தை சற்குணமே இயக்கி தயாரிக்கவுள்ளார். அதுபற்றிய அறிவிப்பை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விமல் மற்றும் ஓவியாவுடன் முதல் பாகத்தில் நடித்த முக்கியமான கலைஞர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்பை கே2 (K2) என வைத்துள்ளனர்.