அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

சிறிது காலம் ஓய்வுக்கு தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளார்.

தங்கலான்

இந்நிலையில், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதற்கட்ட படப்பிடிப்பிற்கும், இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும்.” என பதிவிட்டுள்ளார்.

தங்கலான்

vikram’s Thangalaan movie shooting wrapped

சமத்துவத்தை வலியுறுத்திய ‘மாமன்னன்’ படக்குழுவை பாராட்டிய ‘மன்னன்’ ரஜினி

சமத்துவத்தை வலியுறுத்திய ‘மாமன்னன்’ படக்குழுவை பாராட்டிய ‘மன்னன்’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ரஜினி கூறியது,

“‘மாமன்னன்’ திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth praises the crew of mamannan

JUST IN வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஜெயம்ரவி – கீர்த்தி இணைந்த ‘ஜீனி’ பூஜை

JUST IN வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஜெயம்ரவி – கீர்த்தி இணைந்த ‘ஜீனி’ பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

இந்த நிறுவன மூலம் போகன், கோமாளி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் ஐசரி கணேஷ்.

இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

ஜீனி

இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25 படம் படத்தின் பூஜை இன்று மதுரவாயிலில் உள்ள பி ஜி எஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி நாயகிகள் கீர்த்தி ஷெட்டி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் இந்த பட பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் அர்ஜுனன் ஜூனியர். இவர் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். முக்கிய வேடத்தில் தேவயாணி நடிக்கிறார்.

ஜீனி

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டிலும் இன்று பட பூஜையில் வெளியிடப்பட்டது.

‘ஜீனி’ என்ற தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை 5 மொழிகளில் பான் இத்தியா படமாக வெளியிட உள்ளனர். வேல்ஸ் மற்றும் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாகும்.

ஜீனி

GENIE movie pooja starring Jayam Ravi Kriti shetty

உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா.? ப்ளூ சட்டையை கிழித்த ‘மாவீரன்’ பட பிரபலம்

உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா.? ப்ளூ சட்டையை கிழித்த ‘மாவீரன்’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படம் ஜூலை 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட் படமான ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் திரைக்கு வருகிறது.

டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible 7 படத்திற்கு தான் அதிக ரிசர்வேஷன் நடக்கிறது என யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஷ்வா..

“உங்க வயசுக்கு இப்படி ஒரு போட்டோ ஷேர் பண்ணி, நீங்க இதை பண்ணிருக்க வேணாம் சார்” என பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Vanakkam sir,
I am Arun Viswa,Maaveeran padathoda producer sir!
Enakku en padamdhan sir Mission impossible,Avatar,RRR Ellamae! Unga vayasukku IPdi oru pic share panni neenga idha pannirukka venam sir!#Maaveeran https://t.co/Jc9uOvzdlJ

— arun Viswa (@iamarunviswa) July 4, 2023

அவரின் பதிவு இதோ…

மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது.

முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.

‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட். https://t.co/U5eHpV8mhm

maaveeran producer arun viswa reply to blue sattai maran twit

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் இணைந்த பாலிவுட்டின் மிரட்டல் இயக்குநர்

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் இணைந்த பாலிவுட்டின் மிரட்டல் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தற்போது ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் காஷ்யப்

Anurag Kashyap joins with vijay’s ‘leo’ movie

HARAA Update : மோகனுடன் மோதும் சுரேஷ் & வனிதா.; சட்டங்கள் சொல்லும் விஜய்ஸ்ரீ

HARAA Update : மோகனுடன் மோதும் சுரேஷ் & வனிதா.; சட்டங்கள் சொல்லும் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார்.

மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். ‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் பாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

‘ஹரா’ திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.

‘ஹரா’ திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்.

இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

https://t.co/qNEpkFxPCS

Vijay Sri and Mohans Haraa shoot Updates

More Articles
Follows