கமல்ஹாசன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்..; மாஸ்டர் டைரக்டரின் மாஸ் ட்வீட்

கமல்ஹாசன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்..; மாஸ்டர் டைரக்டரின் மாஸ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal lokesh kanagarajகமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த ‘விக்ரம்’ திரைப்படம் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்படத்தில் கமலுடன், ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடைப்பெற்றது.

இந்த படத்தின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரலீசாகவுள்ளது என இநக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Vikram first look from tomorrow evening at 5pm
#Vikram #arambichitom

ரஜினி அங்கிளுக்கு பிறகு பிரபுதேவா அங்கிள்..; ‘மஞ்சப்பை’ ராகவனின் ‘மை டியர் பூதம்’

ரஜினி அங்கிளுக்கு பிறகு பிரபுதேவா அங்கிள்..; ‘மஞ்சப்பை’ ராகவனின் ‘மை டியர் பூதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

அதில் ஒன்று…

இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் இணை–துணை இயக்குநராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்த ராகவன், கடம்பன் படம் மூலம் தனி அடையாளம் கண்டார்.

காதல் – கமர்ஷியல் – ஹாரர் – திரில்லர் என தொடர் வரிசை படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து மகிழும்படியான கதை – திரைக்கதையமைப்பில் பேண்டஸி படமாக பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராகவன்.

இதுவரை ஏற்றிடாத அற்புதமான, அபிமான வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பின் எப்படி ‘ரஜினி அங்கிள்’ என்று அவரை கொண்டாடினார்களோ அதைப்போல் இப்படத்திற்கு பின் அனைத்து குழந்தைகள் PD (பிரபுதேவா) அங்கிள் என கொண்டாடும் விதம் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

மிகுந்த பொருட்செலவில் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக அமெரிக்கா மற்றும் லண்டனிலுள்ள VFX நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு — அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : ராகவன்

Prabhu Deva to act in Manjappai Raghavan direction

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நயன்தாரா காஜல் நடிக்கும் படங்கள் அப்டேட்ஸ்

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நயன்தாரா காஜல் நடிக்கும் படங்கள் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu Deva Nayantharaஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

அதில் சில படங்களின் விவரம் வருமாறு…

முதல் படத்தை, இயக்குநர் ஷாஜி கைலாசிடம் ‘ஆகஸ்ட் 15’, ‘துரோனா’, ‘ரெட் சில்லிஸ்’ போன்ற படங்களிலும், இயக்குநர் மது சுதாகரனின் ‘சேண்ட்விச்’ மற்றும் ‘10:30am லோக்கல் கால்’ படங்களிலும் துணை, இணை இயக்குநராக பணியாற்றிய விப்பின் முதன் முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக தமிழில் அறிமுகாகிறார்.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இது ஒரு சைக்காலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இருக்கும்.

நயன்தாராவின் இரண்டாம் படத்திற்கான குழு மற்றும் இதர விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த புதிய படங்களை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

******
காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் நடிப்பில் – ராஜா சரவணன் இயக்கத்தில் ‘ரவுடிபேபி’

பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி, இணை இயக்குநராக பணியாற்றியவரும், கதை–வசனம், VFX, எடிட்டிங், மார்கெடிங் என பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று பணியாற்றிவருமான ராஜா சரவணன் ‘ரவுடிபேபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

எல்லா குழந்தைகளும் ஏஞ்சல் அல்ல என்ற வரிகளுடன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பாக பேசப்பட்டது.

சுவாரஸ்யமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், பயம் கலந்த, கவனம் பிசகாத, அதிர்ச்சியான காட்சியமைப்புகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மற்ற நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில்…

ஒளிப்பதிவு : செல்லதுரை இசை : சாம் CS
கலை : ரெமியோன் பாடல்கள் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
எடிட்டிங் : தீபக் துவாரகநாத் ஸ்டண்ட்: ‘சுப்ரீம்’ சுந்தர்

தயாரிப்பு நிர்வாகம்: ஆனந்த் – சசிகுமார்
நிர்வாக தயாரிப்பு: S.ஷங்கர் சத்தியமூர்த்தி – கிட்டு

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தயாரிப்பு — அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம்
ராஜா சரவணன்

*******
அபிஷேக் பிலிம்ஸ்
ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில்
புதிய படத்தில் கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா

கதை சொல்ல போறோம், காத்தாடி, குலேபகாவலி, ஜாக்பாட், கோஷ்டி, ஷூ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபுதேவா உடன்
கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலி கான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இது ஒரு ஹாரர் கலந்த காமெடி குடும்ப படமாக உருவாகவிருக்கிறது.

ஜேக்கப் ரத்தன் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், அஸ்வின் இசையமைக்கிறார்.

விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்கிறார், கலை அமைப்பபை மோகன் மேற்கொள்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

தயாரிப்பு : ரமேஷ் பி.பிள்ளை

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்

கல்யாண் குமார்

Ramesh Pillai of Abhishek films to produce 8 new films

மனித கடவுளே… தெய்வமே… சென்னை வந்த ரஜினியை வரவேற்ற ரசிகர்கள் (வீடியோ)

மனித கடவுளே… தெய்வமே… சென்னை வந்த ரஜினியை வரவேற்ற ரசிகர்கள் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஜூன் 19ல் மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்.

சென்னையிலிருந்து தோஹா சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.

அவர், அங்கிருந்து ரோஜெஸ்டர் நகர் சென்றார். அங்கு சென்று ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த்,

ஜூன் 21ல் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று அங்குள்ள மாயோ கிளினிக் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

(இதை கூட விமர்சித்து விளக்கம் கேட்டு இருந்தார் நடிகை கஸ்தூரி)

உடல் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் ஓய்வில் இருந்தார் ரஜினி.

அப்போது அமெரிக்காவிலுள்ள தன் ரசிகர்களையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இவை இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில். அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் தலைவா… தெய்வமே.. மனித கடவுளே… வரவேற்றனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம், ‘மருத்துவ பரிசோதனை நல்ல படியாக முடிஞ்சது’ என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Rajini fans cheer for the legend with chants of ‘Thalaivar’ as he returns home after health check-up in US

கமல் கட்சியிலிருந்து வந்தவரை ரஜினி பன்ச் டயலாக் சொல்லி வரவேற்ற முதல்வர்

கமல் கட்சியிலிருந்து வந்தவரை ரஜினி பன்ச் டயலாக் சொல்லி வரவேற்ற முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் படு தோல்விக்கு பின்னர் நடிகர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.

இதில் மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.

(கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.)

அப்போது அவர்களை வரவேற்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக.்ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது…

“கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது. மகேந்திரன் முன்பே திமுகவுக்கு வந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும்.

தேர்தலை அறிவித்தபோதே மகேந்திரனை எதிர்ப்பார்த்தேன்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவுக்கு கிடைத்திருக்கின்றனர்” என்றார்.

‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்..’ என்ற பன்ச் டயலாக்கை பாபா படத்தில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

கமல் கட்சியிலிருந்து விலகி வந்த ஒருவரை ரஜினி டயலாக் சொல்லி் முதல்வர் வரவேற்றது இங்கே கவனிக்கத்தக்கது.

Ex MNM members Mahendran and Padma Priya join DMK

E5yCoA2VgAwJO9q

பிரபுதேவா சத்யராஜ் நயன்தாரா காஜல் அகர்வால் கூட்டணி.; 8 படங்களை தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்

பிரபுதேவா சத்யராஜ் நயன்தாரா காஜல் அகர்வால் கூட்டணி.; 8 படங்களை தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில்

பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில்

டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் – கல்யாண் – விப்பின்,
இயக்கத்தில் 8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள்.

பிரபுதேவா நடிப்பில் மூன்று படங்கள், நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் ஒரு படம்.

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2ம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில்
சிவப்பு – மஞ்சள் – பச்சை என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

நல்ல கதைகளும், உணர்வுப்பூர்மான காட்சியமைப்புகளும் என்றென்றும் வெற்றிபெறும் என்ற ஃபார்முலாவில் விநியோகம், தயாரிப்பு என தொடர்ந்து செய்து வரும் ரமேஷ் பி.பிள்ளை இன்றைய சூழலில் மட்டுமல்ல எந்த சூழலிலும் இந்த ஃபார்முலா வெற்றி பெறும் என உறுதிபட முடிவெடுத்து சினிமா மீது உள்ள பேஷன் மற்றும் திறமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் முடிவில் நல்ல கதையம்சத்தோடு, காட்சிக்கு தேவையான பிரம்மாண்டமான பொருட்செலவில் 8 புதிய படங்களை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

Prabhu Deva and Nayanthara joins for a new film

More Articles
Follows