விஜய்யின் ‘பைரவா’ ஆடியோ டிசம்பர் 17ஆம் தேதி.?

vijay bairavaaபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் முதல்வர் ஜெயலலிதா இறந்த காரணத்தால் இதன் வெளியீடு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வருவதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் சில மணி நேரங்களில் பைரவா படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என இணையங்களில் தகவல்கள் பரவியுள்ளது.

மேலும் இது தொடர்பான ஹேஷ்டேக் #BairavaaAudioOnDec17 ஒன்றையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தற்போது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அஹ்மது இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.

பைரவா ஆடியோ வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கவும் என அவர் கேட்டுள்ளார்.

RIAZ K AHMED ‏@RIAZtheboss 3m3 minutes ago

#BairavaaAudio launch date is not yet finalised, Kindly don’t believe any rumours. Wait for the official announcement.

Overall Rating : Not available

Latest Post