தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாருஹாசன், ஜனகராஜ் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் விஜய்ஸ்ரீ ஜி.
இவர் தற்போது பிக்பாஸ் புகழ் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG – பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து பேசியுள்ளார்.
அதில்… நிறைய திறமையான சீனியர் நடிகர்களை நாம் மறந்துவிட்டோம். புதுமுகங்களை தேடியே பல இயக்குனர்கள் அலைகிறார்கள். நல்ல நடிகர்களை கண்டு கொள்வதில்லை.
தாதா 87 படத்தில் 87 வயது சாருஹாசனை நடிக்க வைத்தேன். ஜனகராஜை நடிக்க வைத்தேன்.
ஒருவேளை ரகுவரன் உயிரோடு இருந்தால் அவரையும் நடிக்க கேட்டு இருப்பேன். நடிகர் மோகனை நடிக்க அழைத்துக் கொண்டு இருக்கிறேன்.
அதுபோன்ற டான் படத்தில் ரஜினி சம்மதித்தால் அவரை நடிக்க வைத்திருப்பேன். ஆனால் ரஜினி விக் இல்லாமல் நடிக்க சம்மதிப்பாரா? என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Vijay Sri asked Will Rajini act without Wig