விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்திற்கு இடைக்காலத் தடை

விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்திற்கு இடைக்காலத் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi puriyatha puthirரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் புரியாத புதிர்.

முதலில் இப்படத்திற்கு மெல்லிசை எனப் பெயரிட்டு இருந்தனர்.

ஷாம் இசையமைத்திருந்த இப்படத்தை ஜே. சதீஷ் குமார் தயாரித்திருந்தார்.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இப்படம் நாளை வெளியாகும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை வெளியிட இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படம் வெளியாகும் என ட்விட்டரில் சற்றுமுன் தெரிவித்துள்ளார் படத்தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார்.

4m4 minutes ago

is all set for release tomorrow!!no worries..don’t forget to catch Makkal Selvan in theatres tomorrow

Vijay Sethupathis Puriyatha Puthir will not be released tomorrow

அந்த நாலு பேர் நல்லாயிருந்தால் நாடு நல்லா இருக்கும்… வைரமுத்து

அந்த நாலு பேர் நல்லாயிருந்தால் நாடு நல்லா இருக்கும்… வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu speech at Medway Hospital Opening Ceremonyசென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார்.

‘நீயா நானா’ புகழ் கோபிநாத், நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும் போது…

“டாக்டர் பழனியப்பன் அவர்களின் வளர்ச்சியை வெறும் பொருளாதார வளர்ச்சி என்று கூறிவிட முடியாது. பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுடன் நின்று விடுவது. பொருளாதார வளர்ச்சி என்பது தனியுடைமை.

மருத்துவ வளர்ச்சி என்பது தான் பொதுவுடைமை. அவர் இந்த இரண்டும் இணைந்த வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்.

அவர் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

ஒன்று அவரது அறிவு வெற்றி பெற்றுள்ளது; இரண்டு அவரது மனிதாபிமானம் வெற்றி பெற்றுள்ளது.

அவரது அறிவுடன் கூடிய மனிதாபிமானம் வெற்றி பெற்றுள்ளது. அவரது மனிதாபிமானத்துடன் கூடிய அறிவும் வெற்றி பெற்றுள்ளது.

மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு தான் மனிதனை மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

காரைக்குடியில் செல்வந்தர் குடியில் பிறந்த தங்கள் மகனை பணத் தொழிலில் விட்டு விடாமல், பதிப்புத்தொழிலில் விட்டு விடாமல் , கலைத்துறைக்கு விட்டு விடாமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் பெரும் பணியான மருத்துவத் துறைக்கு அனுப்பிய அவரது பெற்றோர்களை நான் பாராட்டுகிறேன்.

அவர் தன் பெற்றோரிடமிருந்து பண்பாடு, அறிவு. சமூக ஒழுக்கம் மூன்றையும் கொண்டு வந்திருப்பது அவர் பெற்ற பேறு.

ஒரு நோயாளி மருத்துவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு மருத்துவர் நோயாளி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இருவருக்கும் பரஸ்பரமானது.

நாட்டில் நான்கு பேர் சரியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், டாக்டர்கள், காவல் துறைத் தலைவர்கள், கல்வித்துறை தலைவர்கள் என்கிற இந்த நான்கு பேரும் சரியாக இருந்தால் நாட்டு ஒழுக்கம் சரியாக இருக்கும்.

அதோ போகிறாரே நீதிபதி அவர் நேர்மையானவர், அந்த மருத்துவர் ஒழுக்கமானவர், அந்த கல்வி போதிக்கும் ஆசிரியர் மிகவும் உயர்ந்தவர் என்கிற கருத்து இருக்கிற சமூகத்தில் ஒழுக்கத்தின் நிழல் படியும்.

இந்திய மருத்துவத்துறை பற்றி மதிக்கத்தக்க தகவல் என்னிடம் இல்லை. இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்.ஆனால் மேலை நாடுகளில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஆறுலட்சம் மருத்துவர்கள் தேவை. 200 மருத்துவக் கல்லூரிகள் தேவை.

மருத்துவமனைகளில் ஏழு லட்சம் படுக்கைகள் தேவை. இந்தியத் தேவையை ஈடுகட்டும் வகையில் பழனியப்பன் தன் பங்காக இந்திய மருத்துவத் துறைக்கு இந்த மருத்துவமனையை அளித்துள்ளார்.

இம் மருத்துவ மனையின் திறப்பு விழாவில் நோயாளிகள் பெருகி அதிகம் வந்து வாழ்க என்று வாழ்த்தலாமா? முடியாது. இங்கே வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்திப் பேசினார்.

விழாவில், நடிகர் பிரபு பேசும் போது…

” இந்த மூன்றாவது மருத்துவமனையை டாக்டர் பழனியப்பன் திறந்திருப்பது முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்பதை விட அவர்களின் சேவை அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது என்று சொல்ல வேண்டும்.

நான் இன்று ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் டாக்டர் பழனியப்பன் தான் என்பேன். எனக்கிருந்த பல பிரச்சினைகளைச் சரி செய்தவர் அவர். இந்த மருத்துவமனை சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்தினார்.

‘நீயா நானா’ புகழ் கோபிநாத் பேசும் போது,

” டாக்டர் பழனியப்பன் எனக்கு ஒரு சகோதரர் மாதிரி இருப்பவர். எது பற்றியும் பேச, கேட்க, பகிர, கருத்து கேட்க என்று இருக்கும் நமக்கான சிறு வட்டத்தில் உள்ள மிகச் சிலரில் அவரும் ஒருவர். ஒரு டாக்டர் எப்பொழுதும் நம்பிக்கை தருபவராக இருக்க வேண்டும்.

அப்படி நம்பிக்கை தருபவர் அவர். இவர் பலருக்கு குடும்ப டாக்டராக இருப்பவர். குடும்ப டாக்டர் என்றதும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் டாக்டராக இருப்பவர் என்று மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பவர். இவரது மருத்துவ மனைக்கு வந்த அனைவரையும் சம மரியாதையுடன் நடத்துவார். இவர் இன்னும் வளர்ந்து உயரம் தொட வேண்டும். ” என்று வாழ்த்தினார்.

டாக்டர் பழனியப்பன் நிறைவாக நன்றியுரையாற்றினார். அவர் தனது நன்றியுரையில்

“இம் மருத்துவமனை என்பது எனது தனி மனித சாதனையல்ல. இதில் பணியாற்றும் 350 பேரின் உழைப்பால் சேவையால்தான் இது சாத்தியப்பட்டுள்ளது. அந்தக் குழுவில நானும் ஒருவன் அவர்களின் பிரதிநிதியாகவே இங்கு வந்து நன்றி கூறுகிறேன். நன்றி!” என்றார்.

விழாவில்திருமதி பிரபு, திருமதி விசாலாட்சி திருப்பதி, திருமதி ஏகம்மை பழனியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள், முன்னதாக “மெட்வே” மருத்துவமனையின் சி.ஓ.ஓ. நரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

Lyricist Vairamuthu speech at Medway Hospital Opening Ceremony

medway hospital

மத்த நடிகர்கள் பத்தி எனக்கென்ன? மணிரத்னத்தை அதிரவைத்த விஜய்சேதுபதி

மத்த நடிகர்கள் பத்தி எனக்கென்ன? மணிரத்னத்தை அதிரவைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maniratnam vijay sethupathiமிகவும் எளிமையான மனிதர், நடிகர் என்பதால்தான் மக்கள் செல்வன் பட்டத்தை விஜய்சேதுபதிக்கு கொடுத்தேன் என்றார் இயக்குனர் சீனுராமசாமி.

அவரும் பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் பழகி வருகிறார்.

மேலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தாலும் சம்பளத்தை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது.

இவரின் பண்பை நிரூபிக்கும் வகையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

இவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இவரிடம் பேசிய மணிரத்னம் உங்களைத்தவிர இந்த படத்தில் இன்னும் 3 ஹீரோக்கள் இருக்கிறார்கள் என அவர்களின் பெயரை தெரிவித்தாராம்.

“என் கேரக்டர் எனக்கு ஓகே. அது பிடிச்சிருக்கு. நான் நிச்சயம் நடிக்கிறேன். மற்ற கேரக்டரில் யார் நடித்தாலும் பரவாயில்லை. என்றாராம்.

விஜய்சேதுபதியின் இந்த பதிலால் ஆச்சயரியப்பட்டு போனாராம் மணிரத்னம்.

அந்த 3 ஹீரோக்கள் அரவிந்த்சாமி, துல்கர்சல்மான், பகத் பாசில் என கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Mani Ratnam Vijay Sethupathi combo movie updates

பைரவா தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்; இயக்குனர் இவரா?

பைரவா தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kv anandஎம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, ரஜினி நடித்த உழைப்பாளி, அஜித் நடித்த வீரம் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்சன்ஸ்.

இதே நிறுவனம் தயாரித்த விஜய் நடித்த பைரவா படம் இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியானது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துவிட்டதாம்.

இப்படத்தில் விக்ரம் நடிக்க கே.வி. ஆனந்த் இயக்கவிருக்கிறாராம்.

துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச், சாமி2 ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் விக்ரம் என சொல்லப்படுகிறது.

Vikram next movie with Bairavaa Producer Vijaya Productions

நாளை முதல்வரை சந்திக்கும் உலகநாயகன் கமல்

நாளை முதல்வரை சந்திக்கும் உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kerala cmகமல் முதல்வர், முதல் அமைச்சர் கமல் சந்திப்பு, செவாலியே கமல், அரசியல் பேச்சு கமல், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல் சந்திப்பு

சூடான அறிக்கைகளால் தமிழக அரசியல் உலகை மேலும் அனலாக்கியவர் கமல்ஹாசன்.

இந்நிலையில் இவர் முதல்வரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இவர் சந்திப்பது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களைத்தான்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஒரு விழாவுக்கு செல்லும் கமல்ஹாசன் அங்கு கேரள முதல்வரை அவரை இல்லத்தில் சந்திக்கிறாராம்.

(அப்போ கேரள முதல்வரை கமல் சந்திக்கபோறார் அப்படின்னு டைட்டில் போட்டு இருக்கலாமே? கேட்கிறீங்களா..? விஷயம் இருக்கு பாஸ்…)

கடந்த ஆண்டு கமல் செவாலியே விருதுபெற்ற போது பினராய் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்காத நிலையில் கீழே உள்ள கடிதத்தை கமல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.

நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள்.. கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று?

Kamalhassan goint to Meet Chief Minister of Kerala

திறமையான வேலைக்காரன் சிவகார்த்திகேயன்… நயன்தாரா

திறமையான வேலைக்காரன் சிவகார்த்திகேயன்… நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் வேலைக்காரன்.

24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தது குறித்து நயன்தாரா பேசியுள்ளார்.

வேலைக்காரன் படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1-2 மணி இருக்கும். இயக்குனர் அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்களை கொடுத்தார்கள்.

ஜஸ்ட் 10 நிமிஷம் வேனும். தரமுடியமா? எனக் கேட்டுவிட்டு படித்துவிட்டு வந்தார்.

வந்தவர் அப்படியே அந்த வசனங்களை பேசி நடித்து முடித்துவிட்டார்.

சத்தியமா 10 நிமிடத்தில் அவ்வளவு வசனங்களையெல்லாம் பேசவே முடியாது, ஆனால் அவர் முடித்து விட்டார். ரொம்ப திறமையானவர்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara praises Sivakarthikeyan dialogue delivery in Velaikkaran movie

More Articles
Follows