விஜய்சேதுபதியின் ஒரே படத்திற்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது

DUdQzjiVQAAWXK0ஒரு சில இயக்குனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் கூட்டணி அமைத்தால் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட் உண்டு.

அந்த ராசி சென்டிமெண்டில் வெற்றிக்கரமாக பயணித்து வருபவர்கள் என்றால் சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதியை சொல்லலாம்.

இவர்கள் முதலில் இணைந்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனுராமசாமி.

சில பிரச்சனைகளால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதன்பின்னர் விஜய்சேதுபதி-தமன்னாவை வைத்து தர்மதுரை படத்தை இயக்கினார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக இவர்கள் இணைந்திருக்கின்றனர்.

தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

இத்தகவலை யுவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post