எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை… – விஜய்சேதுபதி

Vijay Sethupathi open talks about Trisha and his 96 movie‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்கும் ’96’ என்ற படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது…

நயன்தாரா, தமன்னாவுடன் நடித்துவிட்டேன். இப்போது த்ரிஷாவுடனும் நடிக்கிறேன்.

இவர்களுடன் நடிப்பேன் என நினைக்கவில்லை. தற்போது சந்தோஷமாக இருக்கிறது.

“1996-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதைதான் இது.
அதனால்தான் அந்த வருடத்தை தலைப்பாக வைத்திருக்கிறோம்.

அப்போது 39 வயதாகும் நீங்கள் ஸ்கூல் படிக்கும் பையனாக நடிப்பது சவாலாக இருக்காதா? என்றனர்.

அதற்கு பதிலளிக்கும் போது அவர் கூறியது…

“ஸ்கூல் கேரக்டர் படத்தில் கொஞ்சம் நேரம்தான் வரும்.

அதிலிருக்கும் சவால்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நடிகனாக எனது வேலையை செய்கிறேன்.

கதைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதுதான் நடிகனின் வேலை. வேறு எதையும் நான் எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார்.

Vijay Sethupathi open talks about Trisha and his 96 movie

Overall Rating : Not available

Related News

கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட…
...Read More
ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய…
...Read More
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த…
...Read More

Latest Post