டிசம்பரில் டபுள் ட்ரீட் தரும் பைரவா

டிசம்பரில் டபுள் ட்ரீட் தரும் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaபரதன்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை டிசம்பரில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.

ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களை மட்டும் முதலில் வெளியிட்டுவிட்டு பின்பு, சில நாட்கள் கழித்து அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் ட்ரைலரை வெளியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், டிசம்பரில் இரண்டு விருந்தை பைரவா  தனித்தனியாக தருவார் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush amala paulதனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் தனுஷ் உடன் டூயட் பாடவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தனுஷின் தந்தை கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால், கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

பத்து நாட்களில் ரூ. 50 கோடியை தொட்ட சிம்பு படம்

பத்து நாட்களில் ரூ. 50 கோடியை தொட்ட சிம்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu manjima mohanசிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படம் அண்மையில் வெளியானது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி கிட்டதட்ட 10 நாட்களை கடந்துள்ளது.

இதுவரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது நாட்டில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டு வந்த போதிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சைத்தானை தேவதையாக கொண்டாடும் அருந்ததி நாயர்

சைத்தானை தேவதையாக கொண்டாடும் அருந்ததி நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress arundhathi nairபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகி அருந்ததி நாயர் கூறியதாவது..

“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது இந்த ’சைத்தான்’. அது எனக்கு தேவதை‘ என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்.

என் மீது நம்பிக்கை வைத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றி.

’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை, இந்த சைத்தான் பெற்றுத் தந்திருக்கிறது.

என்னுடைய சொந்த குரலிலேயே இப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளேன்” என்று ஆனந்தமாக கூறுகிறார் அருந்ததி நாயர்.

த்ரிஷா-ஹன்சிகாவை அலற வைத்த நபர் யார்..?

த்ரிஷா-ஹன்சிகாவை அலற வைத்த நபர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha and hansikaஒரு பக்கம் நடிகைகளை கொண்டாடினாலும், மறுபக்கம் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிரபல நடிகைகளான த்ரிஷா மற்றும் ஹன்சிகா ஆகியோரின் போன்களை யாரோ ஒரு விஷமி ஹேக் செய்து விட்டாராம்.

மேலும், அதில் உள்ள எல்லா நம்பர்களையும் அழித்து விட்டார்களாம்

இதனால் அலறிய இருவரும் விரைவில் இணைந்து போலீசில் புகார் கொடுக்கவிருக்கிறார்களாம்.

பூபதி பாண்டியனை தொடர்ந்து அமீத் இயக்கத்தில் விமல்

பூபதி பாண்டியனை தொடர்ந்து அமீத் இயக்கத்தில் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil actor vimalதமிழில் பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூபதி பாண்டியன்.

இவர் இயக்கத்தில் விமல் நடித்துள்ள “மன்னர் வகையறா“ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து சுசீந்திரன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதனை சுசீந்திரன் உதவியாளர் சிவா இயக்க, இமான் இசையமைக்கிறார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறாராம்.

இதன்பின்னர் ராஜதந்திரம் பட இயக்குனர் அமீத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் விமல்.

இத்துடன் ஒரு சில இயக்குனர்களுடன் விமல் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

More Articles
Follows