திருமணத்திற்கு பிறகான காதலை பாடும் விஜய் – சமந்தா.; ரசிகர்கள் ‘குஷி’

திருமணத்திற்கு பிறகான காதலை பாடும் விஜய் – சமந்தா.; ரசிகர்கள் ‘குஷி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத், பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இரண்டாவது சிங்கிளான ‘ஆராத்யா’வை வெளியிட்டனர்.

ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு முதன்மையான நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும்.

இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி போன்ற பரபரப்பான பாடகர்கள் பாடியுள்ளனர்.’ நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’ என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி இனிமையான மெட்டினைப் போலவே மாயாஜாலமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்த விரும்பும் அனைத்து காதலர்களுக்கும் இது ஒரு கீதமாக இருக்கும்.

‘ஹிருதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தி பதிப்பில் ஜூபின் நௌடியல் மற்றும் பாலக் முச்சல் ஆகியோர் பாடியுள்ளனர். கன்னட மதிப்பில் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

மலையாள பதிப்பில் கே. எஸ். ஹரிசங்கர் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் உணர்வும், மந்திரமும் அப்படியே இருக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குஷி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vijay Deverakonda and Samanthas Kushi 2nd Single Aradhya

நானி – மிருணாள் தாக்கூர் இணைந்த ”Hi நான்னா’.; பான் இந்தியா பட ரிலீஸ் அப்டேட்

நானி – மிருணாள் தாக்கூர் இணைந்த ”Hi நான்னா’.; பான் இந்தியா பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் பான் இந்தியா படமாக உருவாகுகிறது.

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நானியின் 30வது படமான ‘hi நான்னா’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

#Nani30 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி அவ்வாறான ஒரு கதையையே தற்போதும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் புலனாகிறது.

தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார் என்று அவர்கள் மேலும் கூறினர்.

தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தியில் ‘hi பப்பா’ என்ற தலைப்பில் உருவாகிறது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்கிறது. பார்ப்போரை கவரும் வகையில் வண்ணமயமாக முதல் பார்வை அமைந்துள்ளது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் ‘hi நான்னா’ உருவாகிறது. அப்பா-மகள் பாசத்தை திரையில் சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும். ‘Hi நான்னா’ இவ்வருடம் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும்.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர்
இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
சிஓஓ: கோட்டி பருச்சூரி
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா

Hi நான்னா

First Look and Title Glimpse of Hi Nanna

Jailer 2nd Single Update : தமன்னாவுக்கு ‘காவாலா..’.. சூப்பர் ஸ்டாருக்கு..??

Jailer 2nd Single Update : தமன்னாவுக்கு ‘காவாலா..’.. சூப்பர் ஸ்டாருக்கு..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மிர்னா மேனன், நாக பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

ஜெயிலர்

Update on Jailer’s second single to drop today evening

‘மறக்குமா நெஞ்சம்’ பட இசை விழா.; மறக்கவே முடியாத மாதிரி மாற்றிய முன்னாள் மாணவர்கள்

‘மறக்குமா நெஞ்சம்’ பட இசை விழா.; மறக்கவே முடியாத மாதிரி மாற்றிய முன்னாள் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக்களம் கொண்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார்.

மேலும் இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு கோபி துரைசாமி, இசை சச்சின் வாரியர், படத்தொகுப்பு சஷாந்த் மளி, கலை பிரேம் கருத்தமலை, பாடல்களை தாமரை எழுதியிருக்கிறார்.

இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யேகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் திருச்சியில் கடந்த வாரம் நடைபெற்றது.

‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுடன் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர்.

மறக்குமா நெஞ்சம் படத்தின் இயக்குனர், நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பள்ளி ஆசிரியர்களை மேடையில் ஏற்றி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர்.

இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருந்து என்று அறிவித்து, ‘விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் – நன்றி’ என்று எழுதப்பட்டு இருந்தது.

விருதை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், மேடையிலேயே கண்கலங்கி, ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பாடல்களை பள்ளி ஆசிரியர்கள் வெளியிட, அதனை திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பள்ளி கால நண்பர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரின் பள்ளி கால நினைவுகளால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதோடு ஆசிரியர்கள் எப்போதும் தங்களின் மாணவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைவர். ஆனால் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு, பள்ளி ஆசிரியர்களை மறக்காமல், அவர்களை அழைத்து, மேடை ஏற்றி அவர்களை அங்கீகரித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்களின் பேச்சை கேட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Marakkuma Nenjam audio launch with ex students of movie team

கிராமத்து கலாச்சாரத்தை சொன்ன ‘தண்டட்டி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

கிராமத்து கலாச்சாரத்தை சொன்ன ‘தண்டட்டி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’.

இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக S. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.

‘தண்டட்டி’ படம் கடந்த ஜூன் 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தண்டட்டி’ படம் ஜூலை 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘Thandatti’ movie OTT Release Date Announcement

ரூ. 200 கோடி மிரட்டி பறித்த வழக்கு.; நடிகை லீனா மரியா ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ. 200 கோடி மிரட்டி பறித்த வழக்கு.; நடிகை லீனா மரியா ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிரியாணி’.

இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகை லீனா மரியா பால் இடம்பெற்றிருப்பார்.

இவர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

நடிகை லீனா மரியா பால் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வரும் லீனா மரியா பால் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார், லீனா மரியா பாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Delhi high court rejects bail plea of Leena Maria Paulose

More Articles
Follows