தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் இசை விழா & படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் மற்றொரு புறம் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’கொலைகாரன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.
ஆன்ட்ரியு லூயிஸ் இயக்கும் இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க,. ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
வழக்கம் போல விஜய் ஆண்டனியே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இப்போது அந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.
‘தியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.