தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது.
Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது.
சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது.
“ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
Infiniti Film Ventures உறுதி தந்தபடி, முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.
“ரத்தம்” படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி
மேலும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி இதே Infiniti Film Ventures தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.
Vijay Antony starrer Raththam movie shoot updates