‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமானவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘லிப்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பேய் படம் என்றாலும் பேயை காட்டாமல் ரசிகர்களை பயமுறுத்தி இருந்தனர்.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பெரிய திரைக்கு வருவதற்கு முன்பே நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளவர் கவின்.

இவர் தற்போது நடித்துள்ள வெப் தொடரின் பெயர் ஆகாஷ்வாணி.

இதில் ரெபா மோனிகா ஜான், ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மெல்வின் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எனோக் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார், சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார்.

சோனியா ராம்தாஸ் தயாரித்துள்ள இந்த தொடர் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட டீசரை நாளை பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் பட டைரக்டர் நெல்சன் வெளியிடுகிறார் என அறிவித்துள்ளனர்.

Kavin’s AakaashVani release date is here

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் ஜீவா.; 3 ஹீரோயின்ஸ் & இசை யார் தெரியுமா?

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் ஜீவா.; 3 ஹீரோயின்ஸ் & இசை யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அரண்மனை 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு என்ன மாதிரியான படத்தை அடுத்து இயக்குவார் சுந்தர் சி என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அடுத்த படம் பேய் படமா.? அல்லது காமெடி படமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சுந்தர்.

வி.இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர். அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் பணிகளைத் தற்போது துவங்கியுள்ளார்.

இந்த புதிய படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

கூடுதல் தகவல்கள்…

ஜீவாவும், ஜெய்யும் ஏற்கனவே சுந்தர்.சியின் இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

நண்பன் படத்தில் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர்.

சுந்தர்.சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, வின்னர் போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sundar C is back With big Entertainer with Srikanth Jai and Jeeva

நாளை கடிகாரத்துக்குள்ளும் வருவேன்..; ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

நாளை கடிகாரத்துக்குள்ளும் வருவேன்..; ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் 5 சீசன்களாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இனி ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் டிஸ்னிபிளஸ் ஹார்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை ஜனவரி 30ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் பார்க்கலாம் என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கெனவே போட்டியாளர்களாக இருந்தவர்களில் சிலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், சினேகன் மற்றும் அபிராமி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று ஒளிப்பரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது…

“முதலில் பெரிய திரையில் (சினிமா) இருந்து சின்னத்திரைக்கு (டிவி) வந்தேன், இப்போது சின்னத்திரையில் இருந்து கைபேசி திரைக்கு (செல்போன் ஸ்கிரீன்) வந்திருக்கிறேன்.

நாளை கடிகாரத்துக்குள் வந்தாலும் அதற்கும் வருவேன்.

பிக்பாஸை தினமும் ஒரு மணி நேரம்தான் விஜய் டிவியில் பார்க்க முடிந்தது.

இனி நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் போதும் என்று நினைக்கிறவர்கள், தினமும் இரவு 9 மணிக்கு தொகுப்பை பார்க்கலாம்.

ஏற்கெனே பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவசாலிகள்தான் இப்போது வந்துள்ளனர். சிலர் விட்ட இடத்தை பிடிக்க வந்திருக்கலாம் அல்லது தீர்க்க வேண்டிய கணக்கை தீர்க்க வந்திருக்கலாம்.

எப்படி இருந்தாலும் அவர்களின் விளையாட்டு உங்களை சுவாரஸ்யப்படுத்தும். நீங்கள் நிகழ்ச்சியை கவனியுங்கள். நீங்கள் சரியாக கவனிக்கிறீர்களா? என்று நான் உங்களை கவனிக்கிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?. என பேசினார் கமல்ஹாசன்.

நீங்க எதுல வந்தாலும் நாங்க பார்ப்போம்.. வாங்க உலகநாயகனே…

Kamal Haasan launched the 24×7 live streaming show Bigg Boss Ultimate

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன் தயாரித்து நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு அனைவராலும் கவரப்பட்ட இயக்குனராக மாறினார் சுதா கொங்கரா.

இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கிய சூர்யாவின் ‘சூரரை போற்று’ படமும் வெளியாகி பெரியளவில் வெற்றிப் பெற்றது.

சூர்யா தயாரித்து இருந்த இந்த படம் 2020ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம் சூர்யா.

இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்கவுள்ளார்.

ஆனால் சூர்யா வேடத்தில் 2.0 பட வில்லன் பாலிவுட் ஹீரோ அக்சய்குமார் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Suriya and Sudha Kongara joins new film

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சர்தார் படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளார். அதில் கார்த்தியின் வயதான வேடம் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் என கூறப்பட்ட கார்த்தியின் ‘கைதி 2’ படம் குறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த பட தகவல்கள் வந்துள்ளன.

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம் கார்த்தி.

இதில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்த தொடங்கியுள்ளதாம்.

கார்த்தி மற்றும் சமந்தா இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Karthi next with Bachelor director sathish selvakumar

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.

அடுத்த வாரம் பிப்ரவர் 11ல் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படம் தான் இது.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இத்துடன் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டான்’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

நாம் ஏற்கெனவே (ஜனவரி 28 அன்று) மார்ச் மாத இறுதியில் டான் படம் வெளியாகும் என செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது மார்ச் 25ல் டான் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.

Sivakarthikeyan and Vijay Sethupathi film release details

More Articles
Follows