தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

டேக் டைவர்ஷன்’ என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.

80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது.

இப்படத்திற்காக தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கிறார்.அதே போல ‘யாரும் எனக்கில்லை ஏனடி ? ‘ என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தில்’பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக இது உருவாகி உள்ளது.

படத்தைப் பார்த்த நாயகன் ராம்சும் ஜான்விஜய்யும் படத்தில் உள்ள கலகலப்பையும் கமர்சியல் அம்சங்களையும் கண்டு வியந்து இயக்குநரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Music director Deva’s Gaana song for ‘Take Diversion’ is declared a Chartbuster now

ஒரு கோடி ரூபாய் செலவில் ‘பாடாத பாட்டெல்லாம்….’ சாங் ரீமிக்ஸ்

ஒரு கோடி ரூபாய் செலவில் ‘பாடாத பாட்டெல்லாம்….’ சாங் ரீமிக்ஸ்

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – 5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்

Raghava Lawrence in #Rudhran Will have old song “Paadatha Pattelam Pada Vanthal” Remix

நொந்து போன ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் தந்த சிம்பு

நொந்து போன ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் தந்த சிம்பு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை. நவம்பர் 25ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் நொந்து போய் இருந்தனர்.

ஆனால் அதே சமயம் சிம்புவின் மற்றொரு படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அப்பேட்டை சிம்புவே தெரிவித்துவிட்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு.

இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

கௌதம் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியையான தாமரை பாடல்கள் எழுதி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே அப்படத்தின் எதிர்பார்ப்பு அசுர வேகத்தில் எகிறியுள்ளது.

தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து விமானத்தில் மும்பை பறந்துள்ளார் சிம்பு. அப்போது அவர் விமானத்தில் செல்லும் ஒரு புகைப்படத்தை அவரே பதிவிட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

VendhuThanindhathuKaadu Mumbai shooting schedule set to commence

இணையதளத்தை பற்ற வைத்த சூர்யாவின் ‘பவர்’ சாங்

இணையதளத்தை பற்ற வைத்த சூர்யாவின் ‘பவர்’ சாங்

சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது.

அறிவு என்பவர் எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலுக்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்

தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .

தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தைச் சுற்றி அற்புதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாடல், நேர்மையைப் பற்றியும், சமத்துவத்தை அடைய இருக்கும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் சூர்யாவின் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம். அதிக உத்வேகத்தோடு இருக்கும் இந்தப் பாடல் கண்டிப்பாக உங்களைத் தலையாட்ட வைக்கும். உங்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும்.

ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

#PowerSong from Suriya’s #JaiBhim is out now

‘அண்ணாத்த’ படத்தில் மருதாணி பாட்டு…; ரஜினி குஷ்பூ மீனா கீர்த்தி ஆட்டம்

‘அண்ணாத்த’ படத்தில் மருதாணி பாட்டு…; ரஜினி குஷ்பூ மீனா கீர்த்தி ஆட்டம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி பட்டைய கிளப்பியது.

இதன்பின்னர் ‘சாரல் காற்றே’ என்ற பாடல் வெளியாகி ரஜினியை இளமை துள்ளலுடன் காட்டியது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

ஆக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மணி அமுதவன் எழுதியுள்ள ‘மருதாணி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்து.

இந்த பாடலில் ரஜினி குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இடம் பெற்று நடனம் ஆடியுள்ளனர். இவர்களுடன் சூரி, சதீஷ், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோரும் நடனமாடியுள்ளனர்.

RAJNIKANTH’S ANNAATTHE – FUN-FILLED ‘MARUDHAANI’ SONG VIDEO IS HERE

‘மதுபான கடை’ இயக்குனரின் அடுத்த படம் குரங்கு பெடல்

‘மதுபான கடை’ இயக்குனரின் அடுத்த படம் குரங்கு பெடல்

10 வருடங்களுக்கு முன்பு ‘மதுபான கடை’ என்ற படத்தை இயக்கி அந்த தலைப்பின் மூலமே ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் கமலக்கண்ணன்.

இப்பட காட்சிகளை கொண்டு வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

தற்போது இயக்குனர் கமலக்கண்ணன், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘குரங்கு பெடல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் இயக்குநர் ராசி அழகப்பனின் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளராக சுமீ பாஸ்கரன் மற்றும் எடிட்டராக சிவாநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Madhubana Kadai fame Kamala Kannnan’s next film is titled Kurangu pedal

More Articles
Follows