மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளதாக கூறப்பபடுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது-

இதற்கு முன்பே விஜய் நடித்த ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களை பிரபுதேவா தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Prabhu Deva joins for Thalapathy 66

ராசாக்கண்ணு மனைவியிடம் நிதியளித்து வாக்குறுதி கொடுத்த லாரன்ஸ்

ராசாக்கண்ணு மனைவியிடம் நிதியளித்து வாக்குறுதி கொடுத்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ படம் 1995ல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதில் நிஜ கேரக்டராக காண்பிக்கப்பட்ட ராசாக்கண்ணு விவாகாரம் தற்போதைய தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகியுள்ளது.

ராசாக்கண்ணு மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்குக்கால் அவர் காவல்நிலையத்திலேயே சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நிஜ ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியை சென்னையில் பல பிரபலங்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர் சூர்யா 15 லட்சம் அவரின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான ஆதாரங்களை பார்வதியிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரிடம் ஒரு தொகையை கொடுத்துள்ளார்.

மேலும் விரைவில் சொந்தமாக வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்து திரும்பியுள்ளார் லாரன்ஸ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்.. “முதலில் இந்த படத்தை எடுத்த சூர்யா, ஜோதிகாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இப்படத்தை எடுக்க வில்லையென்றால் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது” என தெரிவித்தார் ராகவா லாரனஸ்.

Raghava Lawrence pays surprise visit to Parvathi house

சிலம்பரசன் படத்தில் இணைந்த ‘தி பேமிலி மேன்’ சீரிஸ் நடிகர்

சிலம்பரசன் படத்தில் இணைந்த ‘தி பேமிலி மேன்’ சீரிஸ் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

சிம்புவின் ஜோடியாக கயட் லோஹர் என்பவர் நடிக்க ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவரை பார்க்காத சிம்புவை இந்த படத்தில் பார்க்கலாம் என படக்குழுவினரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வாக்கை நிரூபிக்கும் வகையில் சிம்புவின் தோற்றமும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

‘பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5’, ‘தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் என்பவரும் இந்த படக்குழுவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகர் நீராஜ் மாதவ் என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ‘த்ரிஷ்யம்’, ‘சார்லி’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Family man web series actor joins STR film

தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு சூர்யா என்ன சொன்னார் தெரியுமா.?

தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு சூர்யா என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த படம் ஜெய்பீம்.

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்.

ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வருகின்றனர். இப்படியொரு படத்தை சமீபத்தில் நாங்கள் பார்க்கவில்லை எனவும் தங்கள் பாராட்டினை பக்க பக்கமாக எழுதி வருகின்றனர்.

பிரபலங்களாலும் மக்களாலும் இந்த படம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாமக கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக புகார்களையும் குற்றச்சாட்டுக்களையும் தினம் தினம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு சில பிரபலங்கள் குரல் கொடுத்த தொடங்கியுள்ளனர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அமீர், நடிகர் சத்யராஜ், உள்ளிட்டோர் ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”அன்புள்ள அனைவருக்கும், ‘ஜெய் பீம்’ படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அன்பு திக்குமுக்காடச் செய்கிறது. இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நீங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த நம்பிக்கைக்கும், உத்வேகத்துக்கும் நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. எங்களோடு நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்”.

எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.

Surya thanks fans ‘for standing by us’ amid police protection at his Chennai house

வரிசைக் கட்டும் பிரபுதேவா படங்கள்.; அடடா.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

வரிசைக் கட்டும் பிரபுதேவா படங்கள்.; அடடா.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் டைரக்சன்.. கோலிவுட்டில் ஆக்டிங் என பிசியாக வலம் வருகிறார் பிரபுதேவா.

இத்துடன் கோலிவுட்டில் சில நேரங்களில் டைரக்சனிலும் ஆர்வம் காட்டுவார்.. படங்களுக்கு நடனம் அமைத்து கொடுப்பதிலும் கலக்குவார்.

தமிழில் பிரபுதேவா நாயகனாக நடித்து கடைசியாக ரிலீசான படம் ‘தேவி 2’.

இதன்பின்னர் தற்போது வரையில் 4 படங்கள் இவரது நடிப்பில் உருவாகியுள்ளது,

முதன்முறையாக பிரபுதேவா போலீசாக நடித்துள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்,

நடனத்திற்கு புகழ்பெற்ற பிரபுதேவா முழுக்க அம்மா சென்டிமெண்ட்டில் நடனம் ஆடாமல் ஆக்சனில் ஆடியுள்ள படம் தேள்.

‘பஹீரா’ என்ற படத்தில் சைக்கோ ஆக நடித்துள்ளார். இதில் பெண் வேடமிட்டும் மொட்டை போட்டும் என பல வித்தியாசமான கெட்அப்புகளில் வருகிறார். காதலித்து இளைஞர்களை ஏமாற்றும் பெண்களை பழிவாங்க பஹீரா-வாக அவதாரமெடுத்துள்ளார் பிரபுதேவா.

இதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

பிரபுதேவா நாயகனாக நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ படம் நவம்பர் 19ல் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. ‘தேள்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவையில்லாமல் லட்சுமி மேனன் உடன் ‘யங் மங் சங்’ என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார் பிரபுதேவா. ஆனால் அந்த படம் முடிந்து சில வருடங்களாகியும் இன்னும் ரிலீசாகவில்லை.

யங் மங் சங் பற்றி கூடுதல் தகவல்…

பிரபுதேவா பேர் யங்க நாராயாணன், ஆர்.ஜே.பாலாஜி பேர் மங்கலம், ‘கும்கி’ அஷ்வின் பேர் சங்கர்.

இந்த படமானது 1980களில் நடக்கும் கதைக்களம். இவர்கள் கிராமத்துல குங்ஃபூ சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்ள சைனா போறாங்க.

குங்ஃபூ கற்றுக் கொண்டபின் இவர்கள் தங்கள் பெயரை மாஸ்டர் யங், மாஸ்டர் மங், மாஸ்டர் சங்னு மாத்திக்கிறாங்க. எனவே படத்தின் பெயர் இப்படி மாறியுள்ளது.

இதில் சித்ரா லக்‌ஷ்மணனின் பெண்ணாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். பிரபுதேவாவின் தந்தையாக தங்கர் பச்சான் நடித்துள்ளார்.

Prabhu Deva’s upcoming films list here

உங்க மதத்தை உயர்த்திக் காட்ட அடுத்த மதத்தை தாழ்த்தாதீங்க – சந்தானம்

உங்க மதத்தை உயர்த்திக் காட்ட அடுத்த மதத்தை தாழ்த்தாதீங்க – சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 16 மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சந்தானம் பதிலளிக்கையில்.. “ஜெய் பீம் படமாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும் ஒரு மதம் பற்றி உயர்வாக பேசலாம். ஆனால் அடுத்த மதம் குறித்து இழிவாக பேசக்கூடாது-

உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். ஆனால், கிறிஸ்தவ மதம் பற்றி தாழ்வாக பேசக் கூடாது. அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது.

ஏனென்றால், சினிமா என்பது ஒரு இரண்டு மணி நேர பொழுதுபோக்கு.

எல்லா மதத்தினரும், சாதியினரும் தியேட்டர்களில் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிறோம். எனவே சாதி மதம் என்பது தேவையில்லாத விஷயம்.

சாதி மத கவலைகளை மறந்து தான் தியேட்டருக்கு வருகிறோம். எனவே சமுதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்..” என்றார்.

‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சபாபதி படத்தில் சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பனாக புகழ் நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், டிக்கிலோனா புகழ் மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் திக்கு வாய் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் 2வது ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிப்பில் ‘சர்வம் சுந்தரம்’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

Santhanam talks about Jai Bhim issue

More Articles
Follows