தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக இப்படத்திற்கு டிரேட் மார்க்கை பெற்றுள்ளனர் என்பதை பார்த்தோம்.
இதன் மூலம் இப்பட தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் விதி.
இது திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
எம்ஜிஆர் மற்றும் ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களை இன்றைய படங்களுக்கு படத்தலைப்பாக வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதுபோல் சில வருடங்களுக்கு பின்னர் விஜய்யின் படத்தலைப்பை புதுமுக நடிகர்கள்/இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளது.
இதுபோல் டிரேட்மார்க் வாங்குவதால் அதை செய்ய முடியாது.
எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான வேட்டைக்காரன் படத்தலைப்பை விஜய் தன் படத்திற்கு வைத்திருந்தார்.
எனவே, விஜய் மட்டும் காப்பியடிக்கலாம். மற்றவர்கள் அவர் படத்தலைப்பு பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
Vijay and his Mersal trademark issue