விஜய் முகத்தையே பார்க்க விரும்பாத அமலா பால்

விஜய் முகத்தையே பார்க்க விரும்பாத அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulநடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகிய இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் இருவரும் முழுமையாக ஒரு வருடம் கூட இணைந்து வாழவில்லையாம்.

வெளிவுலகுக்கு இணைந்து காணப்பட்டாலும் இவர்களிடையே கருத்து வேறுபாடு முன்பே ஏற்பட்டுவிட்டதாம்.

தற்போது இவர்களின் விவகாரம் விவாகரத்து வரை வந்துள்ள நிலையில் இருவரும் மனுதாக்கல் செய்ய நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

கிட்டதட்ட சுமார் 20 நிமிடங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லையாம்.

சூட்டிங்க்கு ரஜினி வராததால் ஷங்கர் எடுத்த முடிவு

சூட்டிங்க்கு ரஜினி வராததால் ஷங்கர் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarகபாலி படத்தின் வெளியீட்டின் போது அமெரிக்காவில் இருந்தார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் சென்னை திரும்பியவுடன் ஷங்கர் இயக்கும் 2.0 சூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஓய்வில் இருப்பதால், ஆகஸ்ட் மாத இறுதியில்தான் கலந்து கொள்வார் எனத் தெரிய வந்துள்ளது.

எனவே, அதுவரை ரஜினி இல்லாத காட்சிகளை இயக்கி வருகிறாராம் ஷங்கர்.

சுதன்ஷு பாண்டே, அடில் ஹூசைன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஆர்.ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை தொடர்ந்து ஜீவாவுடன் லட்சுமிமேனன்

நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை தொடர்ந்து ஜீவாவுடன் லட்சுமிமேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jiiva lakshmi menonஅண்மையில் நயன்தாராவுடன் ஜீவா நடித்த ‘திருநாள்’ படம் வெளியானது.

இதனை அடுத்து, காஜலுடன் ‘கவலை வேண்டாம்’ மற்றும் ஸ்ரீதிவ்யாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.

இதைத் தொடர்ந்து திருநாள் படத்தை தயாரித்த கோதண்டபானி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா.

இப்படத்தை எம்.ஜே.அருண் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

தற்போது ‘சிப்பாய்’, ‘றெக்க’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லட்சுமி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் இணைந்த ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ்

சிம்புவுடன் இணைந்த ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and arunraja kamarajaகபாலியில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடி, ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதித்தவர் அருண்ராஜா காமராஜ்.

இந்நிலையில் மதுரை சூப்பர் ஜெயண்ட் கிரிக்கெட் அணிக்காக ஒரு பாடலை இவர் பாடியுள்ளார்.

இப்பாடலை சிம்புவுடன் இவர் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘ஆட்டைக்கு ரெடியா’ என்று தொடங்கிற இப்பாடல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்பாடல் தமிழ்நாடு பிரிமியம் கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு அணிகள் விளையாடவுள்ள இப்போட்டியானது விரைவில் தொடங்கவுள்ளது.

இப்பாடலுடன் இந்த அணியின் லோகோ மற்றும் வீரர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.

வெளிநாடுகளை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்

வெளிநாடுகளை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthi sureshஇந்திய சினிமாவை வெளிநாடுகளுக்கு பல படங்கள் கொண்டு சென்றாலும் கபாலி படத்திற்கு தனி பெருமை உண்டு.

தமிழே தெரியாத நாடுகளிலும் ரஜினியால் இப்படம் கொண்டு செல்லப்பட்டது.

எனவே தற்போது தமிழ் படங்களுக்கும் வெளிநாடுகளிலும் நல்ல மார்கெட் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரெமோ படத்தை வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி என பிரபலங்கள் இணைந்துள்ளதால் வரவேற்பும் இருக்கும் என படக்குழுவினர் கருதுகிறார்களாம்.

இப்படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘கடலை’ போடும் மா.கா.பா.ஆனந்த்

ஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘கடலை’ போடும் மா.கா.பா.ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadalai movieஅட்டி, மாணிக் படங்களை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வரும் படம் ‘கடலை’.

இதில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இன்று இளம் வயதினர் ஒருவருக்கொருவர் பேசுவதை கடலை என்கிறோம்.

இதில் வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் சஹாய சுரேஷ்.

மேலும் இப்படத்தில், பொன்வண்ணன், யோகி பாபு, ஜான்விஜய், மனோபாலா, தவசி, ராதா, சீமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மெல்லிசை படத்திற்கு இசையமைத்த சாம் CS இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

More Articles
Follows