தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் இணைந்து தயாரித்துள்ள படம் அம்மா கணக்கு. இது ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.
இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இப்படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.
அப்போது தனுஷ் கூறியதாவது…
“பெரும்பாலும் நான் தயாரிக்கும் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இதில் கலந்து கொள்ள நினைத்தேன்.
இது நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இப்படம் தயாராகும் முன்பே, இதன் தமிழ் ரீமேக் உரிமையை எனக்கு வேண்டும் என கேட்டு பெற்றுக் கொண்டேன்.
இதில் நடிக்க அமலாவை கேட்டேன். கல்யாணம் ஆனவுடன் அம்மா வேடம் தர்றீங்களா? என்றார்.
பின்பு ஒப்புக்கொண்டார். நம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒரு படம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார் தனுஷ்.