தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் தயாரித்து அமலா பால் நடித்துள்ள படம் ‘அம்மா கணக்கு’.
வருகிற ஜீன் 17ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது தனுஷ் பேசியதாவது….
“நான் விருதுக்காக திட்டமிட்டு படங்களை எடுப்பத்தில்லை. ஆனால், கடவுள் அருளால் அது தானாக அமைகிறது.
அம்மா கணக்கு படம் சமுதாயத்துக்கு தேவையான படம்.
பள்ளிப் படிப்பில் மிகவும் கடினமான பாடம் கணக்குதான். நான் கூட ப்ளஸ்டூவில் கணக்கு பாடத்தில் ஃபெயில் ஆனவன்தான்.
இப்படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.
அமலாபாலின் க்ளோஸ்அப் காட்சிகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதைவிட என்ன சிறப்பு வேண்டும்?
அமலாபால் இதன் பிறகு இப்படி நடிப்பாரா? என்று தெரியவில்லை. அவர் நடித்த படங்களிலேயே இதான் பெஸ்ட்.
அவருக்கும் அவரது மகளாக நடித்துள்ள யுவாவுக்கும் தேசியவிருது கிடைக்கும் என நம்புகிறேன்”
இவ்வாறு தனுஷ் பேசினார்.