வெற்றிமாறன் அடுத்து கையில் எடுக்க போகும் ப்ராஜக்ட் இதுவா? இது நம்ம லிஸ்ட்ல இல்லயே..!

வெற்றிமாறன் அடுத்து கையில் எடுக்க போகும் ப்ராஜக்ட் இதுவா? இது நம்ம லிஸ்ட்ல இல்லயே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ‘விடுதலை 2’ கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

‘விடுதலை 2’ முடிய இன்னும் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு உள்ளது.

படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் படம் திரைக்கு வரும் என்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் சூரியாவின் வாடிவாசல் படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை 2 பணிகள் தொடங்க இருப்பது ரசிகர்களுக்கு ஆச்ச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vetrimaaran to resume shooting of ‘Viduthalai 2’ before ‘Vaadivaasal’ – Details

இடைவெளி இல்லாமல் ரெடியானார் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

இடைவெளி இல்லாமல் ரெடியானார் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிகிலோனா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

டிகிலோனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானமும், இயக்குநர் கார்த்திக் யோகியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘வடக்குபட்டி ராமசாமி’.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய படத்தை ஒன்றைப் பகிர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

மேலும், ‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் இடைவேளையின்றி தொடர்ந்து 63 நாட்கள் படமாக்கப்பட்டு, மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam starrer ‘Vadakupatti Ramasamy’ shoot wrapped up

லியோ அப்டேட் : அடுத்த கட்ட சூட்டிங் எப்போது?

லியோ அப்டேட் : அடுத்த கட்ட சூட்டிங் எப்போது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்களின்படி, லியோவின் வெளிநாட்டு உரிமையை 60 கோடி ரூபாய்க்கு ஃபார்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

இது விஜய்யின் முந்தைய பெஸ்ட் வாரிசு (32 கோடி) விலையை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.

மறுபுறம், லியோ படத்தின் புதிய ஷெட்யூல் நாளை (ஏப்ரல் 5) சென்னையில் தொடங்க உள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு படக்குழு செல்வதற்கு முன் இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Vijay’s ‘Leo’ shooting to resume on this date!

இந்தாளு எப்படி இவ்ளோ படிச்சாரு.. ஸ்கூலுக்கே போகாம.; கமல் பற்றி ஏஆர்.ரஹ்மான்

இந்தாளு எப்படி இவ்ளோ படிச்சாரு.. ஸ்கூலுக்கே போகாம.; கமல் பற்றி ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாக செய்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.

இன்று நவீன திரையுலகத்தில் எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும் அதை தனது படத்தில் முன்பே பயன்படுத்தி இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். எனவே தான் இவருக்கு உலகநாயகன் என்ற செல்ல பெயரும் உண்டு.

சினிமாவைப் பொறுத்தவரை கமலுக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு இவர் திரையுலகினர் மத்தியிலும் உயர்ந்து நிற்கிறார்.

இந்த நிலையில் கமலின் பெருமையை பற்றி ஒரு தனியார் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவரது பேச்சில்… “கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகம்.. இந்த ஆளு எப்படி இவ்ளோ படிச்சியிருக்காரு அதுவும் ஸ்கூலுக்கே போகாம..

அவர் எது பண்ணாலும் அதுல உண்மையும் இருக்கும் நேர்மையும் இருக்கும்.. அவர் கூட இருந்தா நம இளமையா இருப்போம்” என பேசினார் ஏஆர். ரஹ்மான்.

AR Rahman praises Kamal Haasan in the recent event

#arrahman #KamalHaasan

நடிகை பூர்ணாவின் வீட்டில் புதுவரவு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் .

நடிகை பூர்ணாவின் வீட்டில் புதுவரவு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் .

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூர்ணா என்றழைக்கப்படும் நடிகை ஷம்னா காசிம் டிசம்பரில் தனது யூடியூப் சேனலில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

அதற்கு பிறகு நடைபெற்ற அவரின் வளைகாப்பின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட மெரூன் பட்டுப் புடவையை அணிந்திருந்தார் அவர் .

இதனிடையே திங்கள்கிழமை இரவு துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.

Actress Shamna Kasim blessed with a baby boy

JUST IN ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

JUST IN ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ டீவி யில் ஒளிபரப்பான சரிகம என்னும் பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகளவில் பிரபலமானார் பாடகி ரமணியம்மாள்.

ரமணியம்மாள் என்னும் 64 வயதாகும் இந்தப் பெண்மணியின் குரலை பல சினிமா பிரபலங்களும் பாராட்டி உள்ளனர்.

நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ரமணிக்கு ராக்ஸ்டார் ரமணி என்று பட்டமும் அளிக்கப்பட்டது.

இவர் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இவரின் குரலில் மயங்காதவர்களே இல்லை எனலாம்.

இவருக்கு சின்னத்திரை புகழின் உச்சத்தை கொடுத்தாலும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் பாடியிருக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, விஷால் நடித்த சண்ட கோழி போன்ற படங்களிலும் இவர் பாடியிருக்கிறார்.

மேலும் பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு, கரண் நடித்த காத்தவராயன் படங்களிலும் பாடியுள்ளார்.

கிஷோர் சினேகா நடித்த 2013 இல் வெளியான ‘ஹரிதாஸ்’ படத்தில் வரும் வெள்ள குதிரை என்ற பாடலை பாடியுள்ளார்.

ஆட்டீசம் (autism) நோய் கொண்ட தனது மகனுக்கு ஒரு தாய் பாடும் பாடலாக அந்த பாடலை தன் இனிமையான குரலில் பாடியிருப்பார் ரமணியம்மாள்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4ம் தேதி அவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

Rock star Ramani ammaal passed away

More Articles
Follows