தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.
இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.
தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.
அதன்படி ’வீரமே வாகை சூடும்’ என அப்படத்திற்கு பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விஷால் தன் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் & சென்னை மாநகராட்சி நகர்ப்புற காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு பிரியாணி வழங்கினார். அவர்களுடனே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது.. “ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Veerame Vaagai Soodum first look released Vishal Birthday treat to his fans
