விஜய்சேதுபதி சந்தீப் கௌதம்மேனன் கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

விஜய்சேதுபதி சந்தீப் கௌதம்மேனன் கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.

தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார்.

மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படம் துவங்கப்பட்டதிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்பிலும், படம் மிகப்பிரமாண்ட நிலையை எட்டி வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் வித்தியாசமான திரைக்கதையில், நடிகர் சந்தீப் கிஷன் ஒரு அழுத்தமிகுந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘மைக்கேல்’ திரைப்படம் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக, நாராயண் தாஸ் K நரங் இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்: சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு
இயக்குனர்: ரஞ்சித் ஜெயக்கொடி தயாரிப்பாளர்கள்: பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்
வழங்குபவர்: நாராயண் தாஸ் K நரங்
தயாரிப்பு நிறுவனங்கள் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
நிர்வாக தயாரிப்பாளர்: சிவா செர்ரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Varalaxmi Sarathkumar On Board For Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael

கேரள ‘பம்பர்’ லாட்டரிக்காக இணைந்த ஜோடி வெற்றி & ஷிவானி

கேரள ‘பம்பர்’ லாட்டரிக்காக இணைந்த ஜோடி வெற்றி & ஷிவானி

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார்,…

“கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

Shivani acts alongside Vetri in ‘Bumper’ produced by Vetha Pictures and directed by Selvakumar

பார்ட்னர் பற்றி கொளுத்தி போட்ட புகழ்.. தலையை பிய்த்துக் கொள்ளும் ரசிகர்கள்

பார்ட்னர் பற்றி கொளுத்தி போட்ட புகழ்.. தலையை பிய்த்துக் கொள்ளும் ரசிகர்கள்

‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் பிரபலமானவர் புகழ்.

இவர் தற்போது சினிமாக்களில் தலை காட்டி வருகிறார். சந்தானத்துடன் சபாபதி படத்தில் நடித்தார். பின்னர் அஸ்வின் உடன் என்ன சொல்ல போகிறாய் படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் காமெடி சின்னத்திரை அளவுக்கு பெரிய திரையில் எடுபடவில்லை. அஜித்தின் ’வலிமை’ படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு பெண்ணுடன் அவர் இருக்கிறார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எனவே அந்த பெண் புகழின் காதலியா? வருங்கால மனைவியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் புகழ் இதுவரை எந்த பதிலும் தரவில்லை.

Comedy actor Pugazh wishes to his girl friend?

மீண்டும் வரும் ‘காதல் பிசாசு’ மீரா ஜாஸ்மின்..; யாருக்கு போட்டியோ.?

மீண்டும் வரும் ‘காதல் பிசாசு’ மீரா ஜாஸ்மின்..; யாருக்கு போட்டியோ.?

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக, இளைஞர்கள் மனதைக் கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

‘ரன்’ படத்தில் இடம் பெற்ற காதல் பிசாசு பாடல் மூலம் தமிழக இளைஞர்களை கட்டி போட்டவர் இவர்.

காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

ரன், சண்டகோழி படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக, நிறைய தமிழ் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் பல தமிழ்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது.

ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள மீரா ஜாஸ்மின், பல காலமாக சோசியல் மீடியா பக்கம் வராமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) புதிதாக கணக்கு தொடங்கி இன்று ஒரு நாள் முதலே (55K) 55 ஆயிரம் ரசிகர்களை பெற்றுள்ளார்.

மேலும் இவர் மீண்டும் வந்ததில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் அவர் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கிய ‘மகள்’படத்தில் தான் நடிப்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. நமது மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் நம்மை அசர வைக்க வருகிறார்.

அழகும் திறமையும் நிறைந்த நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருவதால் யாருக்கு போட்டியாக இருக்க போகிறாரோ? பார்ப்போம்.

Meera Jasmine enters the world of social media

மீண்டும் வித்தியாசமான படத்தலைப்பில் விஜய் ஆண்டனி படம்

மீண்டும் வித்தியாசமான படத்தலைப்பில் விஜய் ஆண்டனி படம்

நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி.

தற்போது ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி.

மேலும் இவரது நடிப்பில் ‘சலீம்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் பெரும்பாலும் நெகட்டிவ் டைட்டில்களை கொண்டே இருக்கும்.

சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன், பிச்சைக்காரன் என பல படங்கள் உள்ளன.

ஆனாலும் இவை அனைத்தும் மக்கள் கவனம் ஈர்த்தன.

தற்போது அந்த வரிசையில் தனது அடுத்த படத்திற்கு ‘இரத்தம்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம்-2 ஆகிய படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை இன்ஃபினிட் ஃபிலிம் வெஞ்சூர்ஸ் தயாரிக்கிறது.

Vijay Antony’s next film announced details here

மாநகராட்சி தேர்தல் களத்தில் தளபதி.; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

மாநகராட்சி தேர்தல் களத்தில் தளபதி.; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 170 போட்டியிட்டனர்.

இதில் 100 பேர் வெற்றி பெற்றதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

விஜய்யும் மகிழ்ச்சியில் அவர்களை நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்தினார்.

மேலும் வெற்றிப் பெற்றவர்களுடன் நடுவில் அமராமல் ஓரமாக அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் அனுமதியுடன் போட்டியிடவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அவர்கள் போட்டியிட உள்ளனர்.

Vijay allowed his fan club members to contest in local body election

More Articles
Follows