‘அகிலன்’ படம் ஓடிடி ரிலீசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

‘அகிலன்’ படம் ஓடிடி ரிலீசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்து வெளியான படம் ‘அகிலன்’.

இப்படம் மார்ச் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது.

‘அகிலன்’ படத்தை மார்ச் 31 இன்று முதல் பிரபலமான டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்கிறது.

‘அகிலன்’ படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

‘அகிலன்’ திரைப்படம் கட்டுப்பாடு விதிகளை மீறினால், ஜெயம் ரவியின் படத்துக்கு எதிராக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் படத்துக்கு தடை விதிக்குமா? இருப்பினும், ‘அகிலன்’ OTT வெளியீடு குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பதிலளிக்கும் வரை காத்திருப்போம்.

மேலும் இதற்கு முன்னதாக, சந்தீப் கிஷன் நடித்த ‘மைக்கேல்’ இதே தவறை செய்ததால், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் படத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் ஸ்ட்ரீம் செய்ய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi starrer ‘Agilan’ face a ott release issue by Theater owners

சரத் பாபுக்காக பிரார்த்தனை செய்வோம்! பிரபல நடிகை உருக்கம்.

சரத் பாபுக்காக பிரார்த்தனை செய்வோம்! பிரபல நடிகை உருக்கம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், நடிகரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தெலுங்கு நகைச்சுவை நடிகை கராத்தே கல்யாணி தனது முகநூலில், “சரத் பாபு விரைவில் குணமடைய சுவாமியை பிரார்த்திப்போம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Is veteran actor Sarath Babu hospitalised?

சில தினங்களில் நான் இறந்துடுவேன்.; இயக்குனர் சிவாவின் தம்பி நடிகர் பாலா உருக்கம்

சில தினங்களில் நான் இறந்துடுவேன்.; இயக்குனர் சிவாவின் தம்பி நடிகர் பாலா உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுத்தை படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

அதன் பின்னர் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தையும் இயக்கினார்.

இவரின் தம்பி நடிகர் பாலா.

அஜித்தின் ‘வீரம்’, மோகன்லாலின் ‘புலி முருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா.

இவருக்கு கடந்த சில வருடங்களாக கல்லீரல் பாதிப்பு பிரச்சினை இருந்துள்ளது.

இதனையடுத்து ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அதிலிருந்து மீண்டு வர தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் பாலா. அதில் இன்னும் சில தினங்களில் எனக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் குணமாகியும் வரலாம் அல்லது இறந்தும் போகலாம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் பாலா.

எனவே அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Director Siva brother Bala gets hospitalized due to liver disease

சிம்பு படம்.. நரிக்குறவருக்கு அனுமதி ரத்து – தியேட்டர் மீது வழக்கு.; வட்டாட்சியர் விசாரணை

சிம்பு படம்.. நரிக்குறவருக்கு அனுமதி ரத்து – தியேட்டர் மீது வழக்கு.; வட்டாட்சியர் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.

இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கி தியேட்டரில் படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வீடியோக்களையும் அவர்கள் பதிவிட்டனர்.

ஆனால் இந்த விவகாரம் திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது

திரைப்படம் பார்க்க வந்தவர்களை அனுமதிக்காத புகாரில் ரோகிணி தியேட்டர் பணியாளர் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகார் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

ரோகிணி திரையரங்கில் வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில், காவல்துறை நடவடிக்கை.

வழக்கு விவரம்…

*K11 CR:no.183/2023*
*U/s 341 IPC r/w 3(1)(X1V) SC/ST ACT 1989*

D/o 30/03/2023 @ 08:00 hrs
D/r 30/03/2023 @ 16:00 hrs

SOC:
ரோகினி திரையரங்கம் உள் வளாகம்
100 அடி சாலை கோயம்பேடு

FIR : Inspr K11 PS

*IO:*
Koyambedu Range
AC

*Complaint*
காவேரி பெ/வ 20
க/பெ செல்வம்
சோலை அம்மன் கோவில் தெரு, அலமாதி கிராமம்,
அலமாதி
திருவள்ளூர் மாவட்டம்

(ST – Kemba Telugu)

*Accused*
டிக்கெட் பரிசோதகர், ரோகிணி திரையரங்கம்.

____________________

*Previous message*
Good morning Sir
Koyambedu district
K11 CMBT PS
30/03/2023

*சிம்பு ரசிகர் மன்றத்தால் கிடைத்த டிக்கெட்டின் மூலம் படம் பார்க்கச் சென்று நரிக்குறவர்கள் மற்றும் சிறுவர்களை அனுமதிக்க மறுத்தது தொடர்பாக*

*D/0* 30/03/2023 @ 08.00hrs
*D/R*:30/03/2023 @
11.30hrs

*S0C*
ரோகினி திரையரங்கம் 100 அடி சாலை கோயம்பேடு

1.ராமலிங்கம் M/50
S/0 மணிமுத்து
No,6/22 தெற்கு மாட வீதி கோயம்பேடு
சென்னை _107
*Work: கேசியர் ரோகினி திரையரங்கம்*

2. குமரேசன் M/36
S/0 சின்ன குழந்தை
வேலூர் மாவட்டம்
Work: Security
(திரையரங்கில் தங்கி வேலை செய்பவர்)

*Gist*
08.00 மணிக்கு k11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோகிணி திரையரங்கில் சிம்பு நடித்த 10 தல திரைப்படம் 4 திரையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது திரையரங்கத்திற்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் வருகையின் போது
பாதுகாவலர்கள் (Bouncers) பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினர்.

அதற்கு தங்களை தியேட்டர் உரிமையாளர்கள் தடுப்பதாக நினைத்து மேலும் உஷா ராஜேந்தர் அவர்களை பேட்டி எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் youtube சேனல்கள் திரையரங்கத்தில் உள்ளே வீடியோ கேமராக்களை எடுத்துச் செல்ல முற்பட்டபோது திரையரங்க பாதுகாப்பிலிருந்த பாதுகாவலர்கள் வீடியோ கேமராக்களை திரையரங்கத்தின் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர் இதனால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் youtube சேனல்கள் கோபமடைந்தனர்.

மேலும் தியேட்டர் வளாகத்திற்குள் பிச்சை எடுப்பதற்கு நின்றிருந்த நரிக்குறவர்களிடம் சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்த அவர்கள் திரைப்படத்தின் டிக்கெட்டை இலவசமாக கொடுத்தனர்.

அதனை பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் நரிக்குறவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 15 நரிக்குறவர்கள் படம் பார்க்க வரும்போது நுழைவாயில் பாதுகாப்பு அலுவலில் இருந்த குமரேசன் 36 S/0 சின்ன குழந்தை என்பவர் படம் U/A சர்டிபிகேட் உள்ளதால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியதாகவும் அதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் அறிந்து ரோகிணி திரையரங்கத்தில் கேசியர் திரு. ராமலிங்கம் அவர்கள் வந்து நரிக்குறவர்களுக்கு விளக்கி சொல்லியும் புரியாததால் அனைவரையும் திரையரங்கத்திற்குள் அனுமதித்து அவர்களுக்கு இலவசமாக பாப்கான்கள் வழங்கி அவர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு 10.45 மணிக்கு திரையரங்கத்திலிருந்து மகிழ்ச்சியாக சென்றனர் விசேஷம் ஒன்றுமில்லை.

*குறிப்பு*:
மேற்படி நரிக்குறவர்கள் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே தங்கி வசித்து வருகிறனர்

மேலும் இது சம்பந்தமாக ரோகிணி திரையரங்கம் எங்கள் திரையரங்கத்தில் வரும் அனைத்து பொது மக்களுக்கும் அனுமதி சீட்டு வைத்திருக்கும் பட்சத்தில் அனைவரும் படம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் அவர்களை பாதுகாப்பாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் அனுப்புவது தான் எங்களின் முதல் வேலை என எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர்.

Narikurava people denied entry at Rohini theatre to watch Pathu Thala

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.

இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கியது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விளக்கமே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குறவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வயது பிரச்சனை.?

இதே வயதுள்ள குழந்தைகளை மக்கள் அழைத்து வரவில்லையா.? அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi and GV Prakash on Nari Kurava entry refused at Rohini Screens

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் தந்தை பாலக்காடு சுப்ரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

எனவே பல திரைக் கலைஞர்களும் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

ரசிகர்களும் தங்களது ஆறுதல்களை இணையதளங்களை பதிவிட்டனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அஜித்திற்கு ஆறுதல் இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

அதுபோல நடிகர் அஜித்தும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Ajith wishes EPS on becoming AIADMK’s general secretary

More Articles
Follows