கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்.: ‘பான் இந்திய’ நடிகராக சந்தீப் கிஷன்.; கை கொடுக்கும் லோகேஷ்

கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்.: ‘பான் இந்திய’ நடிகராக சந்தீப் கிஷன்.; கை கொடுக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் .

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார்.

இவருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார்.

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது இவர்களுடன் தயாரிப்பாளர்கள் மைக்கேல் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏராளமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

முன்னணி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் தயாரான ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ‘கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’ என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. அவரின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது.

Sundeep Kishan starrer Michael First Look Dropped

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே.? எப்போ.? நடக்கப் போகுது தெரியுமா.?

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே.? எப்போ.? நடக்கப் போகுது தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

விரைவில் திருமணம் நடைபெறப் போகிறது என்ற செய்தி நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று திருமலையில் திருமண இடத்தை முன்பதிவு செய்து கொள்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Nayanthara to marry Vignesh Shivan on next month

அரசின் பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டும் ‘முத்துநகர் படுகொலை’ – திருமாவளவன்

அரசின் பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டும் ‘முத்துநகர் படுகொலை’ – திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை‘.

கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன என்பதை சொல்லும் 60 நிமிடம் கொண்ட ஒரு ஆவணப்படமாக இது உருவாகி உள்ளது.

ஏற்கனவே ‘மெரினா புரட்சி’ என்கிற இதேபோன்ற ஒரு ஆவணப்படத்தில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று ஏன் வன்முறை களமாக மாறியது.

அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ்.

அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்கிற பெயரில் விறுவிறுப்பான திரைப்படம் போன்ற ஒரு ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பேசும்போது….

“இது ஒரு புலனாய்வு ஆவண திரைப்படம்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம்.

தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வரும் இந்த படம் 12வது தாதாசாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறந்த படமாக ஜூரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிரேசிலில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட 2142 திரைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 41 படங்களில் இந்தியாவில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் என்கிற பெருமையையும் இது பெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தை எடுக்கிறோம் என்கிற செய்தி தெரிந்ததுமே அடுத்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடியில் என் பெயரில் காவல் நிலையத்தில் புகார் செய்தது.

உடனே போலீஸாரும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டுமென சம்மன் அனுப்பினார்கள். எந்த சட்டப்பிரிவில் இப்படி சம்மன் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டதும் அதன்பிறகு அவர்களிடம் பதில் இல்லை. அதேசமயம் இந்த படம் முக்கியமானவர்களுக்காக திரையிட்டுக்காட்டப்படும் போதெல்லாம் போலீசாரிடம் இருந்து தொடர் கண்காணிப்பும் நெருக்கடியும் இருந்து வருகிறது. இதோ இன்று கூட இங்கே அழையா விருந்தாளிகளாக இந்த நிகழ்வை கண்காணிக்க உளவுத்துறை போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்னும் வெளியாகாத ஒரு படத்திற்கு எதற்காக இப்படி ஒரு நெருக்கடி..? இத்தனைக்கும் நாங்கள் நடந்த நிகழ்வை மட்டுமே படமாக எடுத்துள்ளோம். இந்த படத்தை 32 நாடுகளில் திரையிட்டு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ளவர்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக அரசிடம் கோரிக்கையாக முன்வைக்க இருக்கிறோம்.

ஆனால் இவ்வளவு நெருக்கடிகளை பார்க்கும்போது, தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது.. டெல்லியில் இந்த படத்தை திரையிட்டபோது படம் பார்த்த குஜராத், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் கண்ணீர் விட்டனர்.

இந்த படத்தை பார்த்தபிறகு நிச்சயமாக உங்களால் சில நாட்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது.. அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் அங்குள்ள மக்களின் கோரிக்கையாக மட்டுமல்ல அனைவரும் எண்ணமாகவும் இருக்கிறது” என்று பேசினார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது….

“ஆவணப்படம் தான் என்றாலும் ஒரு முழுநீள திரைப்படம் பார்ப்பது போல மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக, நடந்த உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். இந்த படம், பார்ப்பவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் எந்த இடத்திலும் புனைவு என்பதே இல்லை.. ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன, அடுத்து என்ன என்பது போன்று விறுவிறுப்பாக இதை இயக்கியுள்ளார்.

அரசு பயங்கரவாதம் எப்படி அரங்கேறியது, ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக அதிகாரவர்க்கம் என்னென்ன முயற்சிகள் செய்தன. அப்போது முதல்வராக இருந்தவரே தொலைக்காட்சியை பார்த்து தான் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டேன் என்று சொல்லுமளவிற்கு, இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார் இயக்குனர் ராஜ்.

குறிப்பாக துப்பாக்கி சூடு என்கிற நிலை வரும்போது காவலர்கள் சாதாரணமாக வைத்திருக்கும் ரைபிளில் இருந்து தான் சுட வேண்டும் அவர்களுக்கு ஸ்னைப்பர் என்கிற துப்பாக்கியை வழங்கியது யார் ? இதில் கொல்லப்பட்ட அனைவருமே குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எத்தனை கோடி தேர்தல் நிதி வழங்கியது என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் இயக்குனர் ராஜ்.

ஒரு திரைப்படத்திற்கான நேர்த்தி இந்த ஆவணப்படத்தில் இருக்கிறது.

இந்த படம் இன்னும் வெளிவராத நிலையிலேயே இந்த பட இயக்குனருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இனி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது என்பதைத்தான் உரக்கச் சொல்வார்கள்: என்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது….

“இது வெறும் போராட்டம் அல்ல.. அதேபோல நடைபெற்றது மக்கள் படுகொலை மட்டுமல்ல.. சுற்றுச்சூழல் படுகொலையும் தான்.. ஆலை முதலாளிகள் அரசாங்கத்தையே விலைக்கு வாங்க முடியும் என்பதை காட்டும் விதமாக நடந்த நிகழ்வுதான் இது.

இந்த சம்பவம் நடந்தது பற்றி தொலைக்காட்சியில் தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அப்போதைய முதல்வர், அதன்பிறகு சட்டசபையில் அந்த கலவரத்தை அடக்குவதற்கு நாங்கள் என்னென்ன முயற்சி எடுத்தோம் என்று மாற்றி மாற்றி பேசினார்.

இந்தப் படத்தை எடுப்பதற்கு போலீசார் எதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. தற்போது கூட வாசலில் போலீசார் நிற்பதை பார்த்ததும் திருமாவளவன் எம்.பிக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளார்கள் என நினைத்தேன்..

ஆனால் உண்மை விஷயம் இப்போது தான் தெரிகிறது.. இப்படி ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக இயக்குனர் ராஜூவை தமிழக அரசு அழைத்து பாராட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார்.

இந்தப்படம் விரைவில் தணிக்கை வாரியத்தின் பார்வைக்கு செல்ல இருக்கிறது.. அதை தொடர்ந்து இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றிய விபரம் அறிவிக்கப்படும்” என கூறினார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.

முத்துநகர் படுகொலை | Pearl City Massacre – Trailer

Muthunagar massacre

‘Muthunagar massacre’ exposing state terrorism – Thirumavalavan

கட்-அவுட்க்கு பைத்தியங்கள் பாலாபிஷேகம்.: கல்வியில் சினிமா ரசனை வேண்டும்.; முதல்வருக்கு சீனு ராமசாமி கோரிக்கை

கட்-அவுட்க்கு பைத்தியங்கள் பாலாபிஷேகம்.: கல்வியில் சினிமா ரசனை வேண்டும்.; முதல்வருக்கு சீனு ராமசாமி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் (மே 7) ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி  இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

அதில்,

”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன்.

இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு,

சினிமா ரசனை கல்வியை நமது பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். எது உண்மையான சினிமா கலை அதை எப்படி பார்க்க வேண்டுமெனவும்

மாணவ பருவத்தில் அவர்களுக்கு கற்றுத் தருதல், உலகின் தலைசிறந்த படங்களின் வழியே பாடப்பிரிவுகள் உண்டாக்க வேண்டும்,

இது சினிமா தொழில் நுட்பக்கல்வி அல்ல. ரசனையை மேம்படுத்தும் கல்வி.

இக்கோரிக்கையை ஆசான் பாலுமகேந்திரா கலைஞரிடம் முன்வைத்தார். அதையே அவர் புதல்வர் முதல்வரிடம் முன்வைக்கிறேன்.

கர்நாடகா போல தேசிய விருதுப்பெற்ற சினிமா கலைஞர்களுக்கு ஒரு வீடு அரசு வழங்க வேண்டும்.

அது சென்னையில் கூட அல்ல ஏனெனில் இங்கு விலைஅதிகம் அரசுக்கு கூடுதல் செலவு.

அவர்கள் பிறந்த மாவட்டத்தில் தந்தால் மகிழ்வேன். இவ்விரு கோரிக்கைகள் முதல்வரின் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.

சினிமா ரசனை கல்வியை (Film Appreciation) மாணவ மாணவியரின் பாடப்பிரிவில் இலக்கியம், இலக்கணம், ஓவியம், போல வெகுமக்களை ஆட்கொண்ட சினிமாவையும் சேர்க்க வேண்டுமென மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பாடநூல் பிரிவின் தலைவர் திண்டுக்கல் லியோனி அவர்கள் தம் கவனத்திற்கு இணைக்கிறேன்.

சினிமா ரசனை கல்வியின் மூலம் ஒரு தலைமுறை பயன் பெறுமேயானால் திரைக்கலைஞர்களுக்கு காவடி தூக்கும் பக்தர்களாக, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் பைத்தியம் தெளிந்து விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் போக்கு மாறி இளைய சமுதாயம் விமர்சன பூர்வமாக நிதர்சனமான சினிமாவை ரசிக்கும் இனமாக மாறும்” என்று கூறியுள்ளார்.

Seenu Ramasamy’s request to tamil nadu cm MK Stalin

லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர் என 3 ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்‘ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தை கமல்ஹாசனுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர்.

அவர் இயக்குனர் லோகேஷை பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து… “36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குனரை, என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என்று பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj finally wins praise from Kamal Haasan

விசித்திரனை கண்டு வியந்த இயக்குனர்கள் சங்கம்.; ஆர்கே. சுரேஷ் நடிப்பை பார்த்து 2 நாட்களாக உறங்காத உதயகுமார்.

விசித்திரனை கண்டு வியந்த இயக்குனர்கள் சங்கம்.; ஆர்கே. சுரேஷ் நடிப்பை பார்த்து 2 நாட்களாக உறங்காத உதயகுமார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்மகுமார் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “விசித்திரன்”.

இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு
ப்ரத்யேகமாக திரையிடப்பட்டது.

அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி…

வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர்.

ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு திரையிடலாம் என்று ஆர் கே சுரேஷ் சொன்னபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்குனர்களிடம் காண்பிக்க மாட்டேன். அவர்கள் பல கேள்விகளை முன்னவைப்பார்கள் என்பதே காரணம். அவர்களுக்கு எப்போதுமே இறுதியில் தான் திரையிடுவேன்.

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

இந்த செயல் ஆர் கே சுரேஷ் அவரின் நடிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அவரின் நம்பிக்கையை கண்டு நான் பெருமைப்பட்டேன். எனக்கு தெரிந்து ஒரு நடிகன் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு இத்தனை படைப்பாளிகளுக்கு மத்தியில் தைரியமாக நிற்பது இதுவே முதல் முறை. அந்த தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது.

இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து, இயக்குனருடன் இணைந்து கடினமாக உழைத்து தன்னுடைய மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை என்னால் ஆழமாக உணர முடிகிறது.

இது மெதுவாக சூடு பிடிக்கும் ஒரு கதைக்களத்தை கொண்ட ஒரு திரைப்படம். இது போன்ற படங்களை நம் தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கப்பட்டதில்லை.

ஆர் கே சுரேஷ் போன்ற இளைஞர்கள் அவர்களின் நடிப்பை வெளிப்படுத்த இது போன்ற படைப்புகளை கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

உண்மையை சொன்னால் எனக்கு மலையாள படம் “ஜோசப்” ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த படம் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. இந்த படைப்பின் மூலம் ஆர் கே சுரேஷ் என்னும் ஒரு உன்னதமான நடிகன் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டான் என்ற நம்பிக்கையை நான் அவருக்கு கொடுத்தேன்.

இந்த தாக்கத்தின் காரணமாக நான் அண்ணன் ஆர் வி உதயகுமாரிடம் இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினேன்.

இன்றைக்கு ஒரு படம்முதல் மூன்று நாட்கள் திரையரங்குகள் நிரம்ப ஓடினால் அது தான் அந்த படத்திற்கான வெற்றி. பூ, பிஞ்சி,கனி, போன்ற படங்களுக்கு இப்போது இடமில்லாமல் போனது.

அன்னக்கிளி 7 நாட்கள் கழித்து ஓடியது, 16 வயதினிலே பத்து நாட்கள் கழுத்து ஓடியது என்பதெல்லாம் இப்போது கிடையாது. ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது முதல் மூன்று நாட்கள் மட்டுமே.

இது போன்ற சூழலில் ஒரு மசாலா படத்தையோ, கமர்சியல் படத்தையோ தேர்வு செய்து நடிக்காமல் கலை நயமான ஒரு படத்தை தேர்வு செய்து. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய ஊழலை தன் சொந்த பணத்தின் மூலம் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஆர் கே சுரேஷுக்கு என் பாராட்டுக்கள்.

இந்த படம் குறித்து நான் இரண்டு விமர்சனங்களை மட்டுமே ஆர் கே சுரேஷிடம் கூறினேன்.மேலும், இந்த படத்தை பார்த்த அனைத்து படைப்பாளிகளும் இந்த படத்தை பற்றியான விமர்சனத்தை நல்ல முறையிலோ, அல்லது குறைகளை சுட்டி காட்டியோ தங்களின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் வெற்றியில் தான் தமிழ் சினிமாவின் நாகரிகம் அடங்கியுள்ளது என நம்புகிறேன், என்றார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசுகையில்…

தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முளைக்க செய்யும் முதல் முயற்சிதான் இந்த சினிமா. அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு மரணம் இல்லை. காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு இது. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே, அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஆர்.கே.சுரேஷூக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள், என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,

“விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை எனத் தலைவரிடம் சொன்னேன். உடனேயே மற்றைய உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியை தயார் செய்ய சொன்னார்.

அந்த ஏற்பாட்டின்படி இன்று நாம் அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டோம். என்னைப் போலவே உங்களுக்குள்ளும் இந்தப் படம் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் சரவண சக்தி பேசியபோது,

“விசித்திரன்” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் முதலே ஆர் கே சுரேஷ் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது எனக்கு தெரியும்.

நாள் ஒன்றிற்கு தண்ணீர், பழங்கள், பழைய சோறு என அனைத்தையும் உண்டு உடம்பை ஏற்றினார். அப்போது நான் உடலை குறைப்பது எவ்வளவு கடினம் தெரியும் எதற்க்கு இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்றேன்.

அதற்கு அவர் இல்லை நான் என் முழு நடிப்பை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்துவேன் என்றார்.

அதற்கு முன் “ஜோசப்” படத்தை பார்த்துவிட்டு இந்த படம் சிறிது மெதுவான கதைக்களத்துடன் நகர்கிறதே எப்படி சமாளிக்க போகிறாய் என்றபோது இல்லை இந்த படம் என் நடிப்பிற்கு மிக பெரும் வெற்றியையும் பெருமையையும் சேர்க்கும் என்று ஆர் கே சுரேஷ் அவர் நடிப்பின் மீது வைத்த வீண் போகவில்லை என்பதை படத்தை பார்த்தபோது புரிந்துகொண்டேன்.

எப்போதுமே சமூக பிரச்சனையை பேசும் படம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்று தருமா என அச்சம் இருக்கும் ஆனால் அதை கடந்து இன்று சாதித்திருக்கும் என் நண்பன் ஆர் கே சுரேஷுக்கு பாராட்டுக்கள் என்றார்.

Tamil director association appreciates RK Suresh in Visithiran movie

More Articles
Follows