தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கறுப்பு பணத்திற்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கையை நடிகர் விஜய் இன்று காலை பாராட்டி பேசினார்.
அதே சமயம் இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்தாகவும், முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் கூறியதாவது…
‘சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.
இதுதான் இந்த நாட்டு மக்களின் மனநிலை. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து பிஜேபியை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது…
‘நாட்டில் உள்ள ஏழை மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களும் மற்றவர்களைப்போல இந்த நாட்டின் அனைத்து வசதிகளையும் பெற்று வாழ வேண்டும்.
எனவேதான் ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ என்று பல்வேறு திட்டங்களை பிரதர் மோடி கொண்டு வந்தார்.
‘ஒரு பெரியவர் பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்துவிட்டதாகவும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.
மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் இதற்கு முன்பும் நிறைய பேர் இறந்துள்ளனர்.
ஏழைகள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தேவைக்கு போக மீதியை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டு ஏழைகளுக்கு உதவலாமே.
அறிக்கைவிடுவதை விட்டுவிட்டு, மக்களின் கண்ணீரை துடைக்க உதவுங்கள்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்குதான் பயம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.