தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிக்க வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’.
இதில் அஜித் ஜோடியாக காலா நாயகி ஹூமா குரோஷி நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக வருகிறார்.
குடும்ப பாசம் மற்றும் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
கடந்த 2 வருடத்தில் இந்த படத்தின் அப்டேட் கேட்காத அஜித் ரசிகர்களே இல்லை எனலாம்.
இப்படத்தின் 95% காட்சிகள் படமாக்கப்பட்டாலும் ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாம்.
எனவே இதை படமாக்க அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில் இப்பட தியேட்டர் உரிமை, ஓ.டி.டி. தள டிஜிட்டல் உரிமை, டிவி சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் அஜித் தோற்றம் கூட இதுவரை வெளியாகவில்லை.
முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து உரிமைகளும் பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Valimai rights sold huge price before its first look released