அன்லாக் குறும்பட பர்ஸ்ட் லுக்கை ஸ்கெட்ச் இயக்குநர் வெளியிட்டார்

அன்லாக் குறும்பட பர்ஸ்ட் லுக்கை ஸ்கெட்ச் இயக்குநர் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unlock first lookஇன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன்.

கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை, நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக தொலைந்து விட்டால், வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘ லாக்’ செய்து வைத்திருப்பார்கள்.

அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.

மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் ‘அன்லாக் ‘ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கியிருப்பவர் மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக்ரமின் ‘ ஸ்கெட்ச் ‘ படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை – கிறிஸ்டி, ஒளிப்பதிவு – சரண் மணி, படத்தொகுப்பு – ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் – சரத்குமார், இனை தயாரிப்பு – பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் Pro சக்தி சரவணன்.

இக் குறும்படத்தில் மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன் , பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

சில நிமிடங்கள் ஓடும் ‘அன்லாக்’ குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எது எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும்.

இதை படிப்பினையூட்டும் குறும்படம் என்றும் கூறலாம்.

இனிமேல் சினிமா இல்லை; அதான் கடைசி படம்… கமல் முடிவு

இனிமேல் சினிமா இல்லை; அதான் கடைசி படம்… கமல் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் கட்சியை ஆரம்பித்து அன்றுமுதல் தமிழம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார் கமல்ஹாசன்.

அன்றைய தினம் மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

எனவே இன்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் மாவட்ட நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவையே சுவாசித்து வரும் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட உள்ளதால் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என முடிவு எடுத்திருக்கிறார்.

இதை தன் சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இவரது நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.

இதனையடுத்து ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

எனவே இதுவே அவரின் கடைசி படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

கமல் இல்லாத சினிமா… அரசியலில் கமல்… இனி எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

பாடகர் பாப் மார்லியின் மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய தீரா தீராளே பாடல்

பாடகர் பாப் மார்லியின் மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய தீரா தீராளே பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்… என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக “தீரா தீராளே” பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி.

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர்.

அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் “இன்விக்டஸ்”(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்திரம். “இன்விக்டஸ்” ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று “தீரா தீராளே”.

இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், “இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம்.

சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும் கூட. “தீரா தீராளே” பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி”. என்றார்.

IMG-20180214-WA0036

IMG-20180214-WA0039

சூப்பர் ஹிட்டான சவரக்கத்தி-க்கு விழா எடுக்கும் HILARITY INN

சூப்பர் ஹிட்டான சவரக்கத்தி-க்கு விழா எடுக்கும் HILARITY INN

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

savarakathi stillsஅறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது ’சவரக்கத்தி’. இத்திரைப்படம் மக்களாலும், பத்திரிக்கையாளர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்து, ரசித்த ‘HILARITY INN’ சேர்மன் திரு.குறிஞ்சி செல்வன் மற்றும் அவரது பணியாளர்கள், படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கெளரவப்படுத்தும் விதமாகவும் விழா ஒன்றினை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்காக, இன்று இரவு சரியாக 9 மணியளவில் ‘HILARITY INN’ல் சவரக்கத்தி கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விழா எடுக்கின்றனர்.

இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

கைகொடுத்தது மன்னர் வகையறா.; படங்களை குவிக்கும் விமல்

கைகொடுத்தது மன்னர் வகையறா.; படங்களை குவிக்கும் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Mannar Vagaiyar Actor Vimal confirmed 5 moviesகடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது.

குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று.

இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான விமல்

“இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்… அவரது காத்திருப்பு வீண்போகவில்லை..

ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

இதுதவிர சற்குணம் டைரக்சனில் ‘K2’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

ஆக இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விமல்..?

After Mannar Vagaiyar Actor Vimal confirmed 5 movies

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டீசர் வெளியீட்டு தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டீசர் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala teaser may be released on 18th February 2018ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

எனவே படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்களை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி டீசரை முதலில் வெளியிட இருக்கிறார்களாம்.

அதாவது வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி இதன் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடந்து மார்ச்சில் பாடல்களையும், ஏப்ரல் முதல் வாரத்தில் ட்ரைலரையும் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Kaala teaser may be released on 18th February 2018

More Articles
Follows