விக்ரம்-தமன்னாவின் ரொமான்ஸுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்சந்தர்

Vikram Tamannah romance will be colorfull in Sketch says Vijay Chandarகலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ ஸ்கெட்ச்“.

இப்படத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்னர்.

கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர்.

இப்படம் பொங்கல் விருந்தாக நாளை ஜனவரி 12ல் வெளியாகவுள்ளது.

‘வாலு’ படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ள விஜய்சந்தர் இப்படம் குறித்து பேசியதாவது…

“நான் அதிர்ஷ்டசாலிங்க. விக்ரம் எவ்வளவோ பெரிய பெரிய டைரக்டர்களோட ஒர்க் பண்ணினவர் அவர். 2வது படம் எனக்கு தோள் கொடுத்து சாதிக்க வைச்சிட்டார்.

வடசென்னையில் வசிக்கும் எல்லாருமே கஷ்டப்படு றாங்கனு நினைச்சிட்டிருக்கோம். அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு.

பொருளாதாரத்தில் இருந்து லைஃப் ஸ்டைல் வரை எல்லாம் மாறிடுச்சி.

இந்தக் கதைக்காக பல வருஷம் உழைச்சிருக்கேன். வடசென்னை மக்களோடு மக்களா பழகி, அவங்களோடவே வாழ்ந்து இந்தக் கதையை ரெடி பண்ணினேன்.

விக்ரம் சார், அவரோட ஸ்பீடு, எனர்ஜியாலதான் ஒரே மூச்சுல ஷூட் முடிச்சிட்டோம். படத்துல ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன்.

இதுல ‘கனவே கனவே…’ பாடலை விக்ரம் சாரே பாடியிருக்கார்.

இந்த ஸ்கெட்ச்-சில் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் சாரோட ஸ்ரீமன் நடிச்சிருக்கார். இதுல விக்ரம் சாரோட முதல் முறையா சூரி சேர்ந்திருக்கார். அவருக்கு ஜோடியா தமன்னா நடிக்கறாங்க.

இந்தக் கதையை கேட்ட முதல் நாள்ல இருந்தே தமன்னா, கேரக்டராகவே மாறிட்டாங்க. இதுல அவங்க காலேஜ் பொண்ணா ஹோம்லியிலேயும் அசத்தியிருக்காங்க. அவங்க விக்ரமோட வர்ற ரொமான்ஸ் சீன்ஸ் ரொம்பவே கலர்ஃபுல்லா வந்திருக்கு.

தாணு சாரோட சகோதரர்கள் மகன்கள் பார்த்திபன், தினா -தான் இந்த படத்தை தயாரிச்சாங்க. அவங்களை புரொட்யூசர்ஸ்னு சொல்றதை விட நண்பர்கள்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

தாணு சார் இந்தப் படத்தை வெளியிடறார். இந்த ‘ஸ்கெட்ச்’ உங்கள் ஒவ்வொருத்தரையும் கவரும் விதத்தில் ஸ்கெட்ச் போட்டு ரெடி பண்ணி இருக்கோம்” என்றார்.

Vikram Tamannah romance will be colorfull in Sketch says Vijay Chandar

Overall Rating : Not available

Latest Post