‘புதுமுக இயக்குநர் என்றால் நெஞ்சில் குத்துகிறார்கள்..’ – ‘முன்னோடி’ டைரக்டர் குமார் குமுறல்

‘புதுமுக இயக்குநர் என்றால் நெஞ்சில் குத்துகிறார்கள்..’ – ‘முன்னோடி’ டைரக்டர் குமார் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PRO Johnஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால்.எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் “முன்னோடி”.

இப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T.A. குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் பேசும் போது,

“பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார்.

அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது வேண்டாம் என்றேன்.

வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள் என்றேன்.

பாடல்கள், ட்ரெய்லரையாவது பாருங்கள் என்றார்கள்.வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. யாரிடம் வேலை பார்த்தீர்கள்? என்றேன்.
இல்லை என்றார்.

அவரிடம் பேசியபோது பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.

அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி ‘ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்து இருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்து இருக்கிறார். பிரமாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம்.

இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது. ” இவ்வாறு மதன் பேசினார்.

‘முன்னோடி ‘ படத்தின் இயக்குநர் குமார், பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார்.

அவர் பேசும் போது, ” நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.

என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது.

18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது.

அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன்.

அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.

இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள்.

அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப் படக்கூடாதே என்பது தான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல், விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா ? இல்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.

தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா ? என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள்.

நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான் என்கிறார்கள்.
புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா?

நல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார்.ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீசியன் படம் என்றுதான் சொல்வேன்.

என் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ” இவ்வாறு இயக்குநர் குமார் பேசினார்.

இந்நிகழ்வில் ‘முன்னோடி ‘ படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன், நாயகி யாமினி பாஸ்கர், நடன இயக்குநர் சந்தோஷ், படத் தொகுப்பாளர் என்.சுதா, இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக மக்கள் தொடர்பாளர் ஏ. ஜான் அனைவரையும் வரவேற்றார்.

Distributors and Theater Owners rejects debut directors says Munnodi director SPTA Kumar

munnodi team press meet

தனது வேட்பாளர்களை அறிவித்தார் வெங்கட் பிரபு

தனது வேட்பாளர்களை அறிவித்தார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabhuசென்னை 28 படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் வெங்கட்பிரபு.

ஆனால் இம்முறை படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இவரது ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்போது, நாளை முதல் வேட்பாளர் அறிமுகம் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் வெங்கட்பிரபு.

தற்போது ஒரு சில வேட்பாளர்களை அதாவது கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார்.

சரவணன் ராஜன் என்பவர் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும் மற்ற வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் உடன் கைகோர்க்கும் சிம்பு-அனிருத்

ஏஆர் முருகதாஸ் உடன் கைகோர்க்கும் சிம்பு-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss Simbu Anirudhகெளதம் கார்த்திக், சனா, லாலு, பிரசாந்த் நாயர், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ரங்கூன்.

இப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

இவரிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இதில் விக்ரம் என்பவர் ஜி.வி.பிரகாஷின் உதவியாளராக இருந்தவர்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ இல்லாத ஆகாயம்’ என்ற சிங்கிள் பாடலை நாளை சிம்பு வெளியிட உள்ளார்.

இதற்கு முன்பு, ஃபாரின் ரிட்டர்ன் என்ற பாடலை அனிருத் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா கோரிக்கையை விஜய்-சிவகார்த்திகேயன் பட இயக்குனர்கள் கேட்பார்களா.?

சமந்தா கோரிக்கையை விஜய்-சிவகார்த்திகேயன் பட இயக்குனர்கள் கேட்பார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samanthaநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார்.

இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இந்தியாவில் நடைபெறவுள்ளது.

எனவே தற்போதுள்ள படங்களை விரைவாக முடித்துக் கொடுக்க சமந்தா முடிவு செய்திருக்கிறாராம்.

தற்போது விஜய்யுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என கமிட் ஆகியிருக்கிறார்.

இதில் விஜய் படத்தை இயக்கி வரும் அட்லி, சமந்தா காட்சிகளை அடுத்த ஜீன் மாதத்திற்குள் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

ஆனால் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

எனவே இயக்குனர் பொன்ராமிடம் தன் காட்சிகளை விரைவில் முடிக்க கோரிக்கை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

Will Samantha request will be accepted by Vijay and Sivakarthiekeyan movie directors

‘ரஜினிக்கு அரசியல் ஆதரவு-ஆலோசனை வழங்குவீர்களா..?’ கமல் பேட்டி

‘ரஜினிக்கு அரசியல் ஆதரவு-ஆலோசனை வழங்குவீர்களா..?’ கமல் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalமுதன்முறையாக பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார் கமல்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சற்றுமுன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை டிடி என்ற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி பற்றி பேசியபின் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது…

நான் ஓட்டுப் போட தொடங்கிய 21 வயது முதலே அரசியலில் இருக்கிறேன்.

ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லாமல், வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் மக்களில் ஒருவனாக இருந்து வருகிறேன்.

ரஜினிகாந்த் சொன்னதுபோல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்பது உண்மைதான்.

தற்போது உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருக்கின்றனர்.

சேவை மனப்பான்மை இல்லை. நடிகர் என்றில்லை அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ இருந்தால் வழங்குவேன். ஆனால் அதை உங்கள் முன் வழங்கமுடியாதே. நான் அவரிடம் தனியாக சொல்வேன்” என்றார்.

Will Kamalhassan support Rajinikanth in Politics

வடசென்னை பாடலை தன் படத்துக்கு பயன்படுத்தும் ஜிவி பிரகாஷ்..?

வடசென்னை பாடலை தன் படத்துக்கு பயன்படுத்தும் ஜிவி பிரகாஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Gv Prakashதனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இப்படம் சில வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகவிருந்தது.

அப்போது அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது.

பின்னர்தான் தனுஷ் நடிக்க, வெற்றிமாறன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க படம் வளரத் தொடங்கியது.

இந்நிலையில் வட சென்னை படத்தில் கமிட்டான போது உருட்டு கண்ணால என்ற பாடலை ஜி.வி. இசையமைத்து வைத்திருந்தாராம்.

தற்போது. அந்த பாடலை தான் புதிதாக நடிக்க இருக்கும் செம என்ற படத்தில் வைத்துக் கொள்ளவிருக்கிறாராம்.

More Articles
Follows