என் முதல் படத்தை கூட பெரிய படமாக தந்தவர் தயாரிப்பாளர்.. – தனசேகரன்

என் முதல் படத்தை கூட பெரிய படமாக தந்தவர் தயாரிப்பாளர்.. – தனசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது…

“ இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.

Director Dhanasekaran speech about Gurumoorthy movie

பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான்.!?. – நடிகர் ராம்கி

பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான்.!?. – நடிகர் ராம்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராம்கி பேசும்போது…

“கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர்.

25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார்.

படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

Money will change Man says Ramki at Gurumurthy event

நட்டி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கவே ஆசை..; பூரிப்பில் பூனம் பஜ்வா

நட்டி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கவே ஆசை..; பூரிப்பில் பூனம் பஜ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பூனம் பஜ்வா பேசும்போது…

“இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கு நல்ல மனிதர்” என்றார்.

பாடலாசிரியர் வெள்ளத்துரை பேசும்போது….

“ஜல்லிக்கட்டுக்காக நான் எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டுத் தான் இந்த படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நான் எழுதிய ‘செக்கசெவந்த சுந்தரிகள்….’ என்கிற பாடலுக்கு இந்த கதாநாயகிகள் ஆடியதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக மேட்ச் ஆகிவிட்டது நன்றாகத் தெரிகிறது” என்றார்.

I like to Act with Actors like Natty says Poonam Bajwa

‘குருமூர்த்தி’ டைட்டிலே பலம்.; நாயகிகள் ஒன்றாயாக வந்தது சந்தோஷம் – ரவிமரியா

‘குருமூர்த்தி’ டைட்டிலே பலம்.; நாயகிகள் ஒன்றாயாக வந்தது சந்தோஷம் – ரவிமரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரவிமரியா பேசும்போது…

“இந்தப் படத்தின் ‘குருமூர்த்தி’ என்கிற டைட்டிலே படத்திற்குப் பலம் தான். புதிதாகப் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லியே படம் எடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

ஆனால் இங்கே ஒரு புரொடக்சன் மேனேஜரே தயாரிப்பாளராக வந்துள்ளதால் இந்தப் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் இடமே ஏற்படவில்லை. நான் நடிகராக மாறியதும் டைரக்சனை அப்படியே தள்ளிவைத்துவிட்டுத் தான் வந்தேன்.

அதேபோல இந்த படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவு அல்லது டைரக்சன் என ஏதோ ஒன்றில் கவனம் செலுத்திப் பயணிக்க வேண்டும்.

பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து மிளகா என்கிற படத்தை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். கதாநாயகிகள் அனைவரும் இந்த விழாவில் ஒற்றுமையாக கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

மிளகா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றிய பாசில் தான் இந்த படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். அப்போதே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என கூறினேன்’’என்றார்.

Gurumurthy title itself Mass says Ravimariya

3 பெண்களுடன் என்னை ஆட வைச்சுட்டியே.; ராதிகாவிடம் புலம்பிய ராம்கி

3 பெண்களுடன் என்னை ஆட வைச்சுட்டியே.; ராதிகாவிடம் புலம்பிய ராம்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் ராதிகா பேசும்போது…

“இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் வெவ்வேறு ஜானர்களில் நடனம் அமைப்பதற்குச் சவால் விடும் பாடல்களாக அமைந்திருந்தன. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்னை வேலைவாங்க வேண்டும் என்பதற்காகவே பிளான் பண்ணி இசையமைத்தது போல பாடல்களுக்கு சூப்பராக இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மூன்று பெண்களுடன் சேர்ந்து என்னை ஆட வைத்து விட்டாயே என்று ராம்கி செல்லமாகப் புலம்புவார். அதேபோல நடிகர் நட்டி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய படங்களில் நான் மாஸ்டராக வேலை பார்த்திருந்தாலும் முதன்முறையாக அவரை ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்தது” என்று கூறினார்.

Choreographer Radhika speech at Gurumoorthy Audio launch

மூன்று நாளில் பிரமாண்ட வசூல் அள்ளிய ‘லவ் டுடே’…

மூன்று நாளில் பிரமாண்ட வசூல் அள்ளிய ‘லவ் டுடே’…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் வெளியீட்டும் உரிமையை ரெட் ஜயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனால், மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 15 கோடி வரை வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது.

Love Today movie three Days Collections

More Articles
Follows