தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவைப் பொறுத்தவரை நிறைய சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம், ஸ்டண்ட் யூனியன், ஒப்பனை கலைஞர்கள் சங்கம், பெப்சி யூனியன், டப்பிங் யூனியன் உள்ளிட்ட 24 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் ஒளிப்பதிவாளர்கள் சங்கமும் செயல்பட்டு வருகிறது.
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம், 1972ம் ஆண்டு, நவ.27ம் தேதி தொடங்கப்பட்டது.
பெஃப்சி’ அமைப்புடன் இணைக்கப்பட்ட இந்தச் சங்கம் இப்போது 50 வருடத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய தலைவரான கார்த்திக் ராஜா, பொதுச் செயலாளர் இளவரசு, பொருளாளர் சக்தி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசித்து 50 வருட ஆண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
Cinematographers Association 50th Year Celebration