ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

idlyஇயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “ இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தரன் , கண்ணன் (ஒளிப்பதிவு) , ஜெய் பிரவீன் (படத்தொகுப்பு ) , உமா ஷங்கர் (கலை ) மற்றும் பாண்டியன் (உடை ) .

இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது.

பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது.

பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

BREAKING: கமல்ஹாசனிடம் பேசியது என்ன..? டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

BREAKING: கமல்ஹாசனிடம் பேசியது என்ன..? டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and rahul gandhiமக்கள் நீதி மய்யம் கட்சி அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி சென்றார் இக்கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

இதன்பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது…

“காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் ” என்றார் ராகுல் காந்தி.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cv kumarஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என தரமான படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

இதனிடையில் ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்குகிறார்.

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajith in viswasamநடிகர் அஜித்தை 4வது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இயக்கி வருகிறார் சிவா.

இப்படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடிப்பதாக தெரிகிறது.

இதன் முதல் கட்ட சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அதில் வழக்கம்போல வெள்ளை முடி தாடியுடன் நடித்திருந்தார்.

இந்த சூட்டிங்கின் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இனி அடுத்த கெட் அப்பிற்காக மாறவுள்ளார் அஜித். அதில் கருத்த தலைமுடியுடன் நடிக்கவுள்ளார்.

இந்த போட்டோக்கள் லீக்காகி விடக்கூடாது என டைரக்டர் சிவா உறுதியான முடிவில் இருக்கிறாராம்.

எனவே அஜித்திடம் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இதற்கு அஜித்தும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி

அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natty aka Nataraj got God Father title for his movieபிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நட்ராஜன் தற்போது நடிகராக பிஸியாகவுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ படத்தை தொடர்ந்து இவரது நடிப்புக்கு பல வாய்ப்புகள் வந்தன.

‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காட் பாதர்’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இதன் சூட்டிங் சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அஜித் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்திற்கு ‘காட் பாதர்’ என முதலில் தலைப்பு வைத்திருந்தனர்.

ஆனால் அப்போது வரி விலக்கு காரணமாக ‘வரலாறு’ என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் விட்ட காட் பாதரை நட்டி பிடித்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Natty aka Nataraj got God Father title for his movie

ajith god father

எவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா

எவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salemசென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலையானது தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த அமைகிறது.

தற்போது கூட சென்னையிலிருந்து சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும்.

இதனால் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது பயண நேரம் சுமார் 7 மணி நேரம் ஆகிறது.

புதிய பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும்.
கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நிறைய பேர் வாட்ஸ் அப்பில் கண்டிருக்கலாம்.

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salem

More Articles
Follows