‘அடியே அழகே’ புகழ் ஜஸ்டின் பிரபாகரனின் அடுத்த பாடல்

ulkuthuஇயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் மற்றும் நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘உள்குத்து’.

திருடன் போலீஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “பெசையும் எசையா…’ சிங்கிள் ட்ராக்கை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

கவிஞர் விவேக் இப்பாடலை எழுத, வேல்முருகன் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் பாடியுள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் அண்மையில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் இடம்பெற்ற அழகே… அடியே… என்ற பாடலை கேட்காதவர்கள் யாருமில்லை எனலாம்.

அந்த வரிசையில் இப்பாடலும் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகிறது.

Overall Rating : Not available

Latest Post