ஒரு படக் கூத்து…. தயாரிப்பாளரை மாற்றிய ஜெயம் ரவி டீம்..!

ஒரு படக் கூத்து…. தயாரிப்பாளரை மாற்றிய ஜெயம் ரவி டீம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi-Shakti Project Gets A Producer‘மிருதன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஜெயம் ரவி மற்றும் சக்தி செளந்தராஜன் இணைகின்றனர்.

இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு மற்றும் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்படத்தை ஒரு நாள் கூத்து படத்தை தயாரித்த, கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கவிருந்தது.

ஆனால் தற்போது இப்படத்தை கெனன்யா நிறுவனத்துக்கு பதிலாக ஜபக் தயாரிக்கிறார்.

‘போகன்’ படத்தை அடுத்து, சக்தி செளந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

டாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் ஜி.வி.பிரகாஷ்..!

டாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் ஜி.வி.பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G V Prakash's Upcoming Movie Updates2006ஆம் ஆண்டு வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

இந்த பத்து ஆண்டுகளில் 50 படங்களை கடந்து விட்டார். விஜய் நடிப்பில் வெளியான தெறி இவரது 50வது படமாகும்.

குறுகிய காலத்தில் ஒரு இசையமைப்பாளராக சாதனை புரிந்து நிலையில், தற்போது நடிகராகவும் சாதனை படைப்பார் என தெரிய வருகிறது.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்குபடம் வருகிற ஜீன் 17ஆம் தேதி ரிலீசாகிறது.

இதனையடுத்து, எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு‘, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘புரூஸ்லீ‘, ஷங்கர் குணா இயக்கத்தில் கெட்ட பையன் சார் இந்தகார்த்தி‘ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

மேலும் சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் ஒரு படம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் எனவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவையில்லாமல், ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்மற்றும் ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்‘ ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.

இவர் செல்லும் வேகத்தை பார்த்தால் மாதம் ஒரு படத்தை வெளியிட்டு மற்ற நடிகர்களுக்கு சவால் விடுவார் போலவே…

 

சிங்கப்பூரும் சிவகார்த்திகேயனும்… இம்முறை ஒர்க் அவுட் ஆகுமா..?

சிங்கப்பூரும் சிவகார்த்திகேயனும்… இம்முறை ஒர்க் அவுட் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Senjitale Single to be Release in Singapore on July 1stசிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜீன் 23ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதில் சிவகார்த்திகேயனின் பெண் வேடம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அனிருத் இசையில் உருவாகியுள்ள சிங்கிளான ‘செஞ்சிட்டாளே…’ என்ற பாடலை சிங்கப்பூரில் வெளியிட உள்ளனர்.

இதற்கு முன்பு இமான் இசையில் உருவான ‘ரஜினி முருகன்’ படத்தில் இடம் பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற பாடலை சிங்கப்பூரில்தான் வெளியிட்டார்கள்.

இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே இம்முறையும் சிங்கப்பூர் ராசி தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறாராம் சிவா.

ஜீலை மாதம் 1ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள ‘சைமா’ விருது விழாவில் ‘செஞ்சிட்டாளே…’ சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடலை எழுதியுள்ளார்.

‘விஜய்யின் அழுகை… விஜய்யின் அமைதி…’ எஸ்ஏசி உருக்கம்..!

‘விஜய்யின் அழுகை… விஜய்யின் அமைதி…’ எஸ்ஏசி உருக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S A Chandrasekhar Talks About Ilayathalapathy Vijayசினிமாவில் சாதித்த வெற்றியாளர்களின் வாரிசுகள் எல்லாம் சினிமாவில் சாதித்து விடுவதில்லை.

ஆனால் இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வருகிறார் ஏஸ்ஏசியின் வாரிசு விஜய்.

என்னதான் உயர்ந்த இடத்தை பிடித்தாலும் இன்றும் அமைதியாகவே காணப்படுகிறார் விஜய்.

இதுகுறித்து இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது…

“விஜய்யின் தங்கை வித்யா, லுக்மியா என்ற நோய் தாக்கி, சிறுவயதிலேலே இறந்துவிட்டார். தங்கை மரணத்தை கண்முன்னே கண்டு விஜய் கதறி அழுதார்.

அந்த மரணத்தின் பாதிப்பே அவர் அமைதிக்கு இன்றுவரை காரணமாய் அமைந்துவிட்டது.” என உருக்கமாக கூறியுள்ளார் எஸ்ஏசி.

தல 57 அப்டேட்ஸ் : அதிரடி தாதாவா..? அல்டாப் டானா..?

தல 57 அப்டேட்ஸ் : அதிரடி தாதாவா..? அல்டாப் டானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith to Play a Gangster in Thala 57?தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தை தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அஜித் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கிறது.

சிவா இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேதாளம் படத்தில் பணியாற்றிய வெற்றி இப்படத்துக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார்.

சமீபகாலமாக அஜித்தின் ஆக்ஷன் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, இதிலும் அதே பாணியை தொடரவிருக்கிறாராம் அஜித்.

அது வேதாளம் படம் போன்ற குர்தா அணிந்த தாதா கேரக்டரா அல்லது பில்லா படத்தில் வந்த கோட் சூட் அணிந்த டான் கேரக்டரா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது.

சுந்தர் சி. இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜினி பட நாயகி..?

சுந்தர் சி. இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜினி பட நாயகி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deepika Padukone to Pair up with Suriya?ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 40வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் தனது 100வது படத்தை இந்நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக சரித்திர படமாக தயாரிக்கவுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யாவிடம் பேசி வருகிறார்கள்.

மேலும் முன்னணி நடிகர்களும் இதில் நடிக்கவிருக்கிறார்களாம்.

விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை கமலகண்ணன் கவனிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் தயாராகவுள்ளது.

எனவே இந்தி மார்கெட்டை கணக்கில் கொண்டு, ரஜினியின் கோச்சடையான் பட நாயகி தீபிகா படுகோனோவை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

More Articles
Follows