ஹீரோவை திட்டி விட்டு ஒரு குப்பைக் கதையை வாங்கிய உதயநிதி

udhayடான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக் கதை.

காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி வெளியிடுகிறார்.

வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

அதில் நடிகர் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் உதயநிதி பேசும் போது,

தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார்.

என்னை நடனமாட ஊக்குவித்தவர் அவர் தான்.

ஒரு படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை அறிந்தேன். இதுவரை நல்லாதானே இருந்தார். இப்போ ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன்.

பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான்.” என்று பேசினார்.

Oru Kuppai Kathai movie will be released by Red giant movies

Overall Rating : Not available

Latest Post