BREAKING பிகில் & கைதி படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

BREAKING பிகில் & கைதி படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt granted permission to screen Special show of Bigil and Kaithiஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.

இந்த இரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக். 25ல் வெளியாகிறது.

இரண்டும் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அதிகாலை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. காலை காட்சிகள் 8 மணிக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. மீறி சிறப்புக் காட்சிகள் இருந்தால் அந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

முன்பதிவு கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருந்தார்.

இதனால் இரண்டு பட அதிபர்களும் தமிழக அரசிடம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாகும் பிகில் & கைதி ஆகிய படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

TN Govt granted permission to screen Special show of Bigil and Kaithi

கமல் படத்திலிருந்து விலகி டைரக்டராகும் ஆர்.ஜே. பாலாஜி

கமல் படத்திலிருந்து விலகி டைரக்டராகும் ஆர்.ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balaji will not be a part of Kamals Indian 2ரேடியோ ஸ்டேஷனில் ஜாக்கியாக தன் வாழ்க்கையை மீடியாவில் துவக்கியவர் ஆர்.ஜே.பாலாஜி.

அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்தார். எல்.கே.ஜி பட மூலம் ஹீரோவும் ஆனார். ஐசரி கணேஷ் தயாரித்த அந்தப் படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இந்தியன் 2ல் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது ஜசரி கணேஷ் தயாரிக்கவுள்ள ஒரு அரசியல் நையாண்டி படத்தை இயக்கவிருக்கிறாராம் ஆர்.ஜே. பாலாஜி.

புதிய படத்தை இயக்க வேண்டியிருப்பதால் கமல் படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

இந்த படத்தில் ஹீரோவாக சதீஷ் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

RJ Balaji will not be a part of Kamals Indian 2

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandita in ipc 376பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம்.

நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன்.

இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. அதுவே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது

‘தரமணி’ ஹீரோ வசந்த் ரவிக்கு வில்லனாக டைரக்டர் பாரதிராஜா

‘தரமணி’ ஹீரோ வசந்த் ரவிக்கு வில்லனாக டைரக்டர் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja as Villain for Vasanth Ravi in Rocky movieடைரக்டர் பாரதிராஜாவை விட தற்போது நடிகர் பாரதிராஜா பிசியாகி விட்டார்.

பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

தற்போது ‘ராக்கி’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் இயக்குனர் இமயம்.

இதில் தரமணி பட புகழ் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறாராம்.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

படம் குறித்து வசந்த் ரவி கூறியதாவது…

எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டராக இருக்கிறேன். சினிமா மேல் உள்ள ஆசையால் நடிக்க வந்துவிட்டேன்.

தரமணி படத்திற்கு பிறகு பல கதைகளை கேட்டு ராக்கி கதையை தேர்வு செய்துள்ளேன்.” என்றார்.

இந்த படம் தாதாக்களுக்குள் நடக்கும் பழிவாங்கும் கதையாம். பாரதிராஜா தாதாவாக நடிக்க ரவுடியாக வசந்த் ரவி நடிக்கிறார்.

Bharathiraja as Villain for Vasanth Ravi in Rocky movie

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

action stillsடிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

“இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன..
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன..

எனும் பா .விஜய்-யின் வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you tube ஹிட்டாகி வருகிறது. இளைஞர்கள் பிரத்யேகமாக நடனம் அமைத்து இணையதள யூடியூப்பில் வெளியிட்டுவருகிறார்கள்.

நவம்பர் 15ல் இப்படத்தின் இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீஸர் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக முழு ஆக்‌ஷன் பாணியில் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கபீர் துன்சிங், யோகிபாபு, சாரா, ஆகான்ஷா பூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு – டட்லீ

எடிட்டிங் – N B ஶ்ரீகாந்த்

ஸ்டண்ட் – அன்பறிவ்.
Song lyric:

நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதச்சாலும்…

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா…
கூட வந்த ஆசையை…
கூந்தலுக்குள் சூடவா…

நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே காத்து கிடக்கிறேன் நான்
நீ மௌனமாகவே நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே…
உன்னில் காதல் இல்லை தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்…

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்னை நினச்சே…
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே…
கனவுல கட்டி புடிச்சேன்

உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நெனச்சே தெனம் செத்து பொழச்சேன்

கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இங்கு பாலை வெளியில் கொல்கிறாயோ

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதச்சாலும்…

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய்64 படத்தை இயக்கி வருகிறார்.

படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார். அவர் பேசியதும்,
படம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாநகரம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். கைதி முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்.

இந்தப்படத்தில் ஏன் ஹிரோயின் இல்லை ?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.

உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல் ?
இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

கார்த்தி இதில் என்ன மாதிரி வருகிறார் ?

படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை ஹிரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான்
இந்தப்படமே உருவானது.
இந்தக்கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக்கொண்டார் அவர் ஹிரோயின் இல்லை காமெடி இல்லை என எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.

இந்தகதை முதலில் வேறொரு ஹிரோவுக்காக ரெடியானதா ?
இந்தப்படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது ?

இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.

படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லையா ?

பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

இரவில் ஷீட் செய்தது எப்படி இருந்தது ?

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம் இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.

விஜய் 64 என்ன மாதிரி படம் ?

அடுத்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன் அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

விஜய் கைதி பார்த்து விட்டாரா ?

படம் இன்னும் விஜய் சார் பார்க்கவில்லை. இப்பொழுது தான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள்.

தீபாவளிக்கு பிகில் வருகிறதே எது ஜெயிக்க விருப்பம் ?

தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் தான். “பிகில்”, “கைதி” இரண்டும் பாருங்கள். நன்றி.

More Articles
Follows