தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் திருநாளில் ரிலீஸாகிறது.
சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது.
அதில் தம்பி ராமையா நொடிக்கு ஒரு முறை தூக்கு துரைன்னா அடாவடி, தூக்கு துரைன்னா அலப்பரை, தூக்கு துரைன்னா தடாலடி என்பார்.
அப்படியென்றால் இதில் அஜித்தின் பெயர் தூக்கு துரை என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த பெயரை அஜித்துக்கு வைக்க என்ன காரணம்? தெரியுமா..?
மதுரை மாவட்டத்தி உள்ள ஒரு காவல் தெய்வத்தின் (தீர்த்தபதியார்) பெயர்தானாம் இது.
எனவே கதைப்படி ரவுடிகளிடமிருந்து மதுரை மக்களை காக்கும் ஒருவராக அஜித் இருப்பார் என்பது தெரிகிறது.
Thooku Durai The Reason behind Ajith name in Viswasam