நட்டியின் மீது பெரும் மரியாதை உள்ளது வால்டர் பட விழாவில் சிபி

நட்டியின் மீது பெரும் மரியாதை உள்ளது வால்டர் பட விழாவில் சிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj in walter press meetதயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது…

இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூககருத்தை பற்றி கூறியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து செல்ல வேண்டும். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் இளையராஜா பேசியது

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

இது எனது முதல் படம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படம் சிபிராஜ் அவர்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். சத்யராஜ் சாரின் “வால்டர்” படம் போல் இந்தப்படமும் பெரிய வெற்றிபடமாக இருக்கும். இப்படம் நன்றாக வர தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை யாமினி சந்தர் பேசியது….

“வால்டர்” எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலான படம். எனக்கு இது முதல் படம். இவ்வளவு பெரிய டீமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரம் தந்துள்ளார்கள். படத்தில் இன்னும் நிறைய, நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது. படம் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ரித்விகா பேசியது…

இந்தப்படம் நாங்கள் அனைவரும் இணைந்து நல்ல முறையில் உருவாக்கியுள்ளோம். இப்போது உங்கள் கையில் கொடுத்து விட்டோம். மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமை. உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம். பாருங்கள் ஆதரியுங்கள் நன்றி.

நடிகர் அபிஷேக் பேசியது…

இயக்குநர் அன்பு எனக்கு ஒரு நல்ல படம் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் சிபிராஜ், சமுத்திரகனி, நட்டி ஆகியோருடன் நடித்தது சந்தோஷம். ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா பேசியது….

எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தில் சிபிராஜ் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல பாத்திரம் படம் அற்புதமாக வந்துள்ளது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியது…

இங்கு நான் நிறைய பேச நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப்பெரிது. மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து அது உருவாகி அதனை கொண்டு சேர்ப்பது வரை, அது பெரும் கடமை. ஒரு சினிமாவால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே பெரும் புரட்சி ஏற்படுத்தும் படங்கள் வந்திருக்கிறது. சமூகத்தை பாதிக்ககூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாவின் வேலை. இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு திரைக்காட்சி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மிகப்பெரும் ஆயுதம் இந்த சினிமா. அப்படி பட்ட சினிமாவில் வேலை செய்யும் வாய்ப்பு தந்த என் அம்மாவிற்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு கோவிலின் கர்பகிரகத்தில் கிடைக்கும் அமைதி எனக்கு சினிமாவில் கிடைக்கிறது. எனது டீமுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் குடும்பமாக அவர்கள் என்றென்றும் என்னுடன் இருப்பார்கள். “வால்டர்” ஒரு கமர்ஷியல் படம் அதிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி பேசியுள்ளோம். நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இன்று படம் உங்கள் முன் வந்துள்ளது. நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் பேசியது…

“வால்டர்” மிகச்சிறப்பான திரைக்கதை கொண்ட படம். இயக்குநர் கதை சொன்னபோதே எனக்கு ரொம்ப பிடித்தது. சொன்ன மாதிரியே எடுத்துள்ளார். இந்தப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். சிபிராஜ்ஜுடன் நடித்தது சந்தோஷம். அவர் நடித்தபோது அவர் அப்பாவை பார்ப்பது போலவே இருந்தது. சமுத்திரகனி என் நெருங்கிய நண்பர். அவருடன் வேலை பார்த்ததும் சந்தோஷம். தயாரிப்பாளர் குடும்பமே காவல்துறை சம்பந்தப்பட்டது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்தப்படம் எல்லோரையும் கவரும் படைப்பாக இருக்கும் நன்றி.

இயக்குநர் U. அன்பு பேசியது….

வால்டர் சிபிராஜ் சாரிடம் இரண்டு கதை சொன்னேன் அவர் இதை தேர்ந்தெடுத்தார். அந்த நாள் முதல் இப்போது வரை இந்தப்படத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு தேவையானதை எடுத்து கொண்டு அதுவாகவே முழுமை பெற்றிருக்கிறது. படம் நல்லபடியாக வந்துவிட்டது இனி எல்லாம் உங்கள் கைகளில். நீங்கள் தான் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்றக்கூடியவர்கள். ஒரு படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் இந்தப்படத்தை நீங்கள் ரசிப்பீர்கள். இந்தப்படம் முழுமையாக உருவாகி நிற்க தயாரிப்பாளர் தான் காரணம் அவருக்கு நன்றி. சிபிராஜ் சார் என்னை முழுமையாக நம்பினார் அவருக்கு நன்றி. நட்டி அண்ணன் பெரும் ஆதரவாக இருந்தார். படக்குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நடிகர் சிபிராஜ் பேசியது…

சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள் அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப்படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு. இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும் போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். இந்தப்படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது. படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, சதுரங்கவேட்டை நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி, முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – U. அன்பு

இசை – தர்மா பிரகாஷ்

ஒளிப்பதிவு – ராசாமதி

படத்தொகுப்பு – S. இளையராஜா

பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி

கலை இயக்கம் – A.R. மோகன்

நடனம் – தஸ்தா

புகைப்படம் – தேனி முருகன்

டிசைன்ஸ் – J சபீர்

சண்டைப்பயிற்சி இயக்கம் – விக்கி

இணை தயாரிப்பு – Dr. பிரபு திலக்

தயாரிப்பு மேற்பார்வை – K மனோஜ் குமார்

தயாரிப்பு – ஸ்ருதி திலக்.

இயக்குனராகும் நடிகை காவேரி

இயக்குனராகும் நடிகை காவேரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kaveriஊடகத் துறையினர் அனைவருக்கும்
எனது அன்பான வணக்கங்கள்

நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்து கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குனர்-தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் இந்த புதிய முயற்சிக்கும் உங்களது அன்பும் ஆதரவும் நல்குமாறு வேண்டுகிறேன்.

‘K2K புரொடக்ஷன்ஸ்’ சார்பாக எங்களது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை முன்னணி திரைப்பட இயக்குனர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன், எதிர்வரும் ஹோலி பண்டிகை நாளான 09 மார்ச்2020 அன்று, காலை 10.05 மணிக்கு வெளியிடுகிறார் என்பதை தெரிவித்து மகிழ்கிறோம். மிக்க நன்றி.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

காவேரி கல்யாணி

சந்தீப் கிசன் – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் அசுரவம்சம்

சந்தீப் கிசன் – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் அசுரவம்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Regina in Raja Vamsamலட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” அசுரவம்சம் ”
2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ” நட்சத்திரம் ” படத்தின் தமிழாக்கமே இந்த
” அசுரவம்சம் ”
இந்த படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஸ்ரீகாந்த் நரோஜ்
இசை – பிம்ஸ் சிசிரோலேயோ
பாடல்கள் – முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், பழமொழி பாலன், எழிலன்பன்
எடிட்டிங் – சிவா Y பிரசாத்
நடனம் – ஸ்ரீதர்
இயக்கம் – கிருஷ்ண வம்சி
வசனம் – A.R.K.ராஜராஜா
மிக அழுத்தமான கதை அம்சத்தோடு உள்ள ஒரு போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு நல்ல விருந்தாக ஒரு போலீஸ் படம் தான் இந்த ” அசுரவம்சம் ” கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷ்னர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷ்னர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதும் தான் இந்தப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இன்னொரு எனர்ஜி பாயிண்டும் இருக்கிறது. இதே சமூக விரோதிகளின் கேஸை எடுத்து நடத்தி இறந்து போன காவல் அதிகாரி அலெக்சாண்டரின் ட்ரஸோடு ஹீரோ வேட்டையாடுவது படத்தின் அதகள ஏரியா என்கிறார்கள்.

இந்தப்படத்தில் பாடல்கள் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. கவிஞர் சே வரலெட்சுமி மிகச்சிறப்பான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். கவிஞர் முருகானந்தம், கவிஞர் வலங்கைமான் முகதீன், பழமொழி பாலன், கவிஞர் சங்கர் நீதி மாணிக்கம், கவிஞர் எழிலன்பன் ஆகியோரும் தங்களின் பாடல் வரிகளால் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார்கள்.

‘அண்ணாத்த’ ரஜினிக்கு வில்லனாக ஜெயம் ரவி பட வில்லன்.?

‘அண்ணாத்த’ ரஜினிக்கு வில்லனாக ஜெயம் ரவி பட வில்லன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, நடிகர் சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக மீண்டும் ஐதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்

இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் கோபிச்சந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கோபிச்சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Gopichand plays baddie in Rajinis Annaatthe

மகளிர் தினத்தில் பெண்கள் பாதுகாப்பு பேரணியில் பங்கேற்ற நயன்தாரா.!

மகளிர் தினத்தில் பெண்கள் பாதுகாப்பு பேரணியில் பங்கேற்ற நயன்தாரா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மார்ச் 8.. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவியர், பல்வேறு துறை பெண்கள் என பங்கேற்றனர்.

இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி சென்றனர்.

பேரணி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை வழியாக 5கி.மீ சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.

Nayanthara participated in Womens safety awareness event on Womens day

இயக்குனர்கள் லோகேஷ் & ரத்னகுமார் ஆகியோரை இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய்

இயக்குனர்கள் லோகேஷ் & ரத்னகுமார் ஆகியோரை இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார்.

நாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இசை வெளியீடு மார்ச் 15ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கியதாக கூறப்படுகிறது.

இப் படத்துக்கு இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதி உள்ளார். இவர் அமலாபால் நடித்த ஆடை படத்தை இயக்கியவர்.

மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனராஜும், ரத்னகுமாரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.

இந்த காட்சியை விஜய், கேமரா, ஆக்‌ஷன் சொல்லி டைரக்டு செய்ததாக கூறப்படுகிறது.

இரண்டு இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லி கொடுத்து விஜய் டைரக்டு செய்ததை படக்குழுவினர் ரசித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

Thalapathy Vijay directed Lokesh & Rathnakumar for Master

More Articles
Follows