விவேகம்-மெர்சல் படத்திற்கு இப்படியொரு கனெக்ஷனா?

விவேகம்-மெர்சல் படத்திற்கு இப்படியொரு கனெக்ஷனா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vivegamஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் மெர்சல் படத்தில் போஸ்டர்களும் வெளியாகின.

இந்த படத்தின் போஸ்டர்கள் எவ்வளவு ரீட்வீட் ஆகியிருக்கிறது என்பது வரை தற்போது போட்டி ஆரம்பமாகிவிட்டது.

இனி இதுவும் யூடியுப் சாதனை போன்று விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா என்ற ஒரே டிசைனர்தானாம்.

தெறி, கத்தி ஆகிய படங்களின் போஸ்டரையும் வடிவமைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The connection between Vivegam and Mersal posters

இளைய தளபதிக்கு வயதாகிவிட்டதா..? ஏன் தளபதி மட்டும்?

இளைய தளபதிக்கு வயதாகிவிட்டதா..? ஏன் தளபதி மட்டும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy vijayநடிகர் விஜய்யை இளைய தளபதி என ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

ஆனால் நேற்று வெளியான மெர்சல் படப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால் ரசிகர்களிடையே சில விவாதங்கள் நடைபெற்றது.

விஜய்க்கு 40 வயதை கடந்து விட்டதால் இளைய என்ற வார்த்தையை நீக்கி விட்டார்களா? எனவும் பேசிக் கொண்டனர்.

எங்க தளபதி எப்பவும் சின்ன பையன் போலத்தான் இருக்காரு.

காலேஜ் ஸ்டூடண்டா கூட இப்பவும் நடிப்பாரு. ஒருவேளை சார்ட்டா கூப்பிட தளபதி வச்சிருப்பாங்க.

இப்ப அதானே ஃபேஷன் என்கிறார்கள் சில ரசிகர்கள்.

அட்லி ஏன் மாத்தினாரு தெரியலையே..??

காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஞ்சித் இயக்கும் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

தற்போது தன்னை தேடி வரும் சில பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி மீண்டும் ‘காலா’ பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார்.

இதனையடுத்து அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருக்கிறாராம்.

மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளத்தான் அங்கு செல்கிறாராம்.

அதன் பின்னர் ஜூலை 13ம் தேதி ரஜினி சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.

பார்வையற்றவர்களை பறக்க வைத்து மகிழும் ‘மைம்’ கோபி

பார்வையற்றவர்களை பறக்க வைத்து மகிழும் ‘மைம்’ கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mime Gopiகபாலி, உரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மைம் கோபி.

இவர் பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக் இதற்காக மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார்.

ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து நல்ல உணவு விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மைம் கோபி கூறுகையில்…

“போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துசெல்கிறோம். மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை.

நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்” என்றார்.

சென்னை விமான நிலையத்தில் பார்வையற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்ப நடிகர் ராமகிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தான் நடித்த ‘திருட்டுப்பயலே- 2’ பட டீசரை வெளியிடும் அமலாபால்

தான் நடித்த ‘திருட்டுப்பயலே- 2’ பட டீசரை வெளியிடும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Amala Paulசுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே- 2’

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார்.

இதில் பாபி சிம்ஹா கதையின் நாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை டீசரை அமலாபால் நாளை ஜீன் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

விஜய்யை வருங்கால முதல்வராக வர வாழ்த்திய பிரபல நடிகர்-அரசியல்வாதி

விஜய்யை வருங்கால முதல்வராக வர வாழ்த்திய பிரபல நடிகர்-அரசியல்வாதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S Ve Shekharஇன்று விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை ரசிகர்கள் விடிய விடிய தமிழகமே மெர்சல் ஆகும் அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி. சேகர் தன் வாழ்த்துக்களை ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை உள்ளது. அவரது ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. நல்லவர் எவர் வேண்டுமானாலும் வரலாம்.

எல்லாம் அறிந்தவர்தான் வரவேண்டும் என்பதில்லை. எல்லாம் அறிந்தவர்களை அருகில் வைத்திருந்தாலே போதும்.

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களும், மக்களின் கஷ்டங்களை அறிந்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.

எனவே வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்களையும் மூத்த சகோதரர் என்ற முறையில் ஆசிகளையும் வழங்குகிறேன்” என தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor cum Politician SVe Shekar wishes Vijay as future Chief Minister

S.VE.SHEKHER‏ @SVESHEKHER

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள் | SV Sekar’s birthday wish to Vijay …

More Articles
Follows