தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் வாங்கியுள்ளார்.
இவர் பிக்பாஸ் முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் கலைமகன் முபாரக்.
ஓரிரு தினங்களாக வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வலிமை ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது.
தெறிக்க விட்டு. மாஸ் காட்டியுள்ளார் அஜித்.
‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; உள்ளிட்ட பன்ச் டயலாக்குகள் இடம்பெற்றுள்ளன.
Exclusive : Here’s Ajith Kumar’s Valimai Official Trailer