‘உங்க வார்த்தைக்கு கட்டுப்படுறோம் தல’..; வலிமை அப்டேட் கேட்டவர்களை ஆஃப் செய்த அஜித்.. அடங்கிய ரசிகர்கள்

Ajith Kumarஅஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட்டை அவரது ரசிகர்கள் கடவுள் முதல் முதல்வர் வரை கேட்டனர்.

எனவே ஓரிரு தினங்களுக்கு முன் அஜித் தரப்பில்…

“எனது ரசிகர்கள் என்ற பெயரில் தான் நடித்துக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு போன்ற இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை மனம் வருந்தச் செய்துள்ளது.

படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அது குறித்து பட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து முடிவு செய்ய உள்ளேன். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் சினிமா மற்றும் சமூக நலம் சார்ந்தவையாக இருக்கும்” என தெரிவித்து ஓர் அறிக்கையை தன் மேனேஜர் மூலம் வெளியிட்டார் நடிகர் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் அறிக்கையை ஏற்கும் வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் “உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல” என்ற வாசகம் கொண்ட போஸ்டரை பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர்.

Thala fans reaction on Ajith’s recent statement

Overall Rating : Not available

Latest Post