சந்தோஷ் பிரதாப் – நிஹாரிகா நடிக்கும் ‘தபால்காரன்’

சந்தோஷ் பிரதாப் – நிஹாரிகா நடிக்கும் ‘தபால்காரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thabalkaran movie shoot starts with Poojaஓர் அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘தபால்காரன்’

இப்படத்தை டி.உதயகுமார் இயக்குகிறார். இவர் ‘கேடயம் ‘, ‘அழைப்பிதழ்’ படங்கள் இயக்கிய ராஜ்மோகனின் உதவியாளர். ‘வானம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.

ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் ‘தபால்காரன்’ படததைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம் ‘படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார்.

‘லொள்ளு சபா’ சாமிநாதன். பேராசிரியர் ஞானசம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஜி.செல்வகுமார், இசை- நீரோ பிரபாகரன் எடிட்டிங் சங்கர்.

”வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலைகிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன.

அதனால் பல முதியோர் பாதிக்கப் படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.

இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கும். இது ஒரு முழுநீள வணிகப் படம் பொழுது போகிற போக்கில் சமூகக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும் ”என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் பூஜை தொடக்கவிழா போரூரில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Thabalkaran movie shoot starts with Pooja

Thabalkaran movie shoot starts with Pooja

பெண்களின் சேலையிலும் பளபளக்கும் பாகுபலி

பெண்களின் சேலையிலும் பளபளக்கும் பாகுபலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali 2 sareesஉலக சினிமா தரத்திற்கு ஈடாக இந்திய சினிமாவின் தரம் எப்போது உயரும்? என்ற கேள்வி சில ரசிக வல்லுனர்களிடையே இருக்கும்.

அதற்கு விடை பாகுபலி தான் என்று சொல்லுமளவிற்கு ஓர் அற்புத காவியத்தை உருவாக்கியுள்ளார் ராஜமவுலி.

இளைஞர்கள் மட்டுமல்லாது குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடையே இப்படத்திற்கு ஆதரவு எழுந்துள்ளது.

இதனை நிரூபிக்கும் வகையில், பாகுபலி படத்தில் இடம்பெற்ற பிரபராஸ் மற்றும் அனுஷ்காவின் போட்டோ டிசைனை தங்கள் சேலைகளில் வடிவமைத்து பெண்கள் அணிந்து வருகின்றனர்.

Baahubali 2 saree designs on sales

ரூ. 200 கோடியை நெருங்கிய பாகுபலி2 முதல் நாள் வசூல்

ரூ. 200 கோடியை நெருங்கிய பாகுபலி2 முதல் நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamouli Anushka Prabhasஇந்திய சினிமாவே எதிர்பார்த்த ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

எதிர்பார்ப்பை விட பல மடங்கு ரசிகர்களின் ஆதரவை இப்படம் பெற்று வருகிறது.

தமிழகத்தில் சில பிரச்சினைகளால் இதன் காலை காட்சி மட்டும் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் மட்டும் ரூ. 146 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் ரூ. 11 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 58 கோடியையும் கர்நாடாகவில் ரூ. 20 கோடியையும், கேரளாவிலும் ரூ. 7 கோடியையும் மேலும் இந்தியில் ரூ. 50 கோடியையும் வசூலித்துள்ளது.

இந்தியா தவிர வெளிநாடுகளில், ரூ. 70 கோடி அளவில் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெளியான முதல் நாளிலேயே ரூ 200 கோடியை வசூலித்துள்ள பாகுபலி இன்னும் எத்தனை சாதனைகளை படைக்கப் போகிறதோ…?

Baahubali 2 aka Bahubali 2 movie first day box office collection

baahubali 2 rana

விஜய்-விக்ரம்-பிரபுதேவாவை ஷங்கர் அழைக்க காரணம் இதுதானா.?

விஜய்-விக்ரம்-பிரபுதேவாவை ஷங்கர் அழைக்க காரணம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vikram Prabhu Deva joins in party with Shankar and Akshaykumarஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

இதனிடைல் ரஷ்டம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் அக்ஷய் குமார்.

எனவே அவருக்கு ஒரு பார்ட்டி வைக்க நினைத்த ஷங்கர் தன் நண்பர்களையும் அழைத்துள்ளார்.

அப்போது தன்னோடு பணிபுரிந்த டாப் ஹீரோக்கள் விஜய் (நண்பன்) விக்ரம் (அந்நியன், ஐ) மற்றும் பிரபுதேவா (காதலன்) ஆகியோரையும் அழைத்துள்ளார்.

இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

அதில் லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீ மகாலிங்கம், அக்சய்குமார், விஜய், விக்ரம், பிரபுதேவா ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து கேட்கப்பட்ட போது.. இது நட்பு ரிதீயிலான சந்திப்புதான். புதிய படம் குறித்த எந்த வித பேச்சும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Vikram Prabhu Deva joins in party with Shankar and Akshaykumar

அஜித் ரசிகர்களை அசத்த வரிந்து கட்டும் நிறுவனங்கள்

அஜித் ரசிகர்களை அசத்த வரிந்து கட்டும் நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவருகிற மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

அன்றைய தினத்தில் சிவா இயக்கியுள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

மேலும் அவரது ரசிகர்களை மகிழ்விக்க தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

சென்னையில் ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ஜெயா டிவியும் அஜித் ரசிகர்களுக்காக சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்ப உள்ளது.

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய 3 படங்களை ஒளிப்பரப்ப உள்ளனர்.

Jaya TV and famous Theatres have special programs on Ajith Birthday

ரசிகர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த இளைய தளபதி

ரசிகர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays surprise meet with his fansஅண்மை காலமாக விஜய் பட சூட்டிங்கின் போதே சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்து வருகிறது.

மேலும் அவரும் திடீரென ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுடன் படம் எடுத்து கொள்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் என்ற பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் வந்திருந்தார்.

அப்போது வெள்ளை வேஷ்டி அணிருந்தார்.

மேலும் சில ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

Vijays surprise meet with his fans

More Articles
Follows