மலர் டீச்சர் ஸ்ருதியை கிண்டல் செய்த நயன்தாராவின் இயக்குனர்?

மலர் டீச்சர் ஸ்ருதியை கிண்டல் செய்த நயன்தாராவின் இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

premam telugu movieநிவின்பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா உள்ளிட்டோர் நடித்து பிரேமம் படம் மலையாள சினிமா காணாத வெற்றியை பெற்றது.

இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கேரக்டர் மலையாளிகளிடையே வளர பாப்புலர் ஆகியது.

மலர் டீச்சர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்து வருவது தாங்கள் அறிந்ததே.

எனவே இப்படம் தெலுங்கில் ரீமேக் உருவாகும்போதே இதன் ஒப்பீடுகள் அதிகளவில் பார்க்கப்பட்டன.

இந்நிலையில் தெலுங்கு பிரேமம் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதற்கு பலரும் மீம்ஸ் கிரியேட் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வினும் தன் பங்குக்கு அவரது பேஸ்புக்கில் கிண்டலடித்துள்ளாராம்.

மீண்டும் உருவாகும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

மீண்டும் உருவாகும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oru kal oru kannadiதயாரிப்பாளராக இருந்த உதயநிதியை ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் நடிக்க வைத்து அவருக்கு ஹீரோ அவதாரம் கொடுத்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.

இதில் இவர்களுடன் சந்தானமும் இணைந்து இருந்தார். இப்படம் கமர்ஷியல் ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் உதயநிதி படத்தை இயக்கவிருக்கிறாராம் ராஜேஷ்.

அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை விரைவில் தொடங்கவிருக்கிறார்.

இதனிடையில் உதயநிதியிடம் கதை விவாதமும் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இதில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது எழில் மற்றும் கௌரவ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி.

இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் ஓகே ஓகே என வந்துவிடுவார் என சொல்லப்படுகிறது.

முதன்முறையாக அதர்வாவுடன் இணையும் நயன்தாரா

முதன்முறையாக அதர்வாவுடன் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva nayantharaஅருள்நிதி நடித்த டிமான்டி காலனி எனும் த்ரில்லர் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‛இமைக்கா நொடிகள் எனும் படத்தை விரைவில் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகனாக அதர்வாக நடிக்க, முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா.

மேலும் மற்ற ஒரு நாயகியும் படத்தில் நடிக்கிறாராம்.

ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை தயாரித்த ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பிரிந்த திருநங்கை குடும்பத்தை சேர்த்து வைத்த ‘தர்மதுரை’

பிரிந்த திருநங்கை குடும்பத்தை சேர்த்து வைத்த ‘தர்மதுரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijaysethupathiசீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

இப்படத்தில் அனைவரது கவனத்தையும் வாட்ச் உமனாக நடித்த திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கவர்ந்தார்.

இதுகுறித்து தன் அனுபவங்களை கூறியதாவது…

என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.

கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன்.

வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்துக்கொண்டே புதிய பூமி நடனப் பள்ளியில் நடனம் கற்றேன்.

அதன்பின்னர் மேடை கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன்.

அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன்.

அப்போதுதான் சீனுராமசாமி என்னை அழைத்து நடிக்க வைத்தார்.

மேலும் விஜய்சேதுபதி அண்ணா என்னை ஊக்கப்படுத்தினார்.

transgender jeeva

இந்த படத்தை பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை போனில் அழைத்து பேசினார்கள். எனக்கு கண்ணீர் வந்து விட்டது.

இப்போது இந்த தர்மதுரை மூலம் என் குடும்பத்தில் இணைந்துவிட்டேன்.”

என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

‘சக நடிகரும் வளரனும்னு நினைக்கிறவர் அஜித்’ – விஜயகுமார்

‘சக நடிகரும் வளரனும்னு நினைக்கிறவர் அஜித்’ – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakumar ajith kumarஅறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் மற்றும் மஹிமா நம்பியார், அபிநயா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குற்றம் 23.

இப்படத்தின் ஆடியோ விழாவில் படக்குழுவினர் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் விஜயகுமார் பேசும்போது…

என் மகன் அருண்விஜய் கேரியரில் மறக்க முடியாத சினிமாவை கொடுத்தவர் கௌதம் மேனன்.

அருண் மேல் நம்பிக்கை வைத்து என்னை அறிந்தால் படத்திற்கு அஜித்தும் ஓகே சொன்னார்.

சக நடிகர்களும் நல்லா இருக்கனும், வளரனும் அப்படி நினைக்கிறவர் அஜித். அவருக்கும் நன்றி. இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

‘விஜய்க்கு அப்புறம் அருண்விஜய் தான்’ – ஜெயம் ரவி பேச்சு

‘விஜய்க்கு அப்புறம் அருண்விஜய் தான்’ – ஜெயம் ரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kuttram 23 audioஈரம், வல்லினம், ஆறாது சினம் படங்களை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குற்றம் 23.

இதில் அருண்விஜய்  ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ளார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஜெயம்ரவி, பரத், ஸ்ரீகாந்த், இயக்குனர் கௌதம்மேனன், சசி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஜெயம்ரவி பேசும்போது….

“சில விழாக்களை ஞாபகப்படுத்தினால் வரத்தோன்றும். சில விழாக்களை ஞாபகம் வைத்துக் கொண்டு வரத்தோன்றும்.

இவ்விழாவிற்கு வரவேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு என் அன்பு அண்ணன் அருண் விஜய்க்காக வந்தேன்.

அவர் ஆக்ஷன், டான்ஸ் என அனைத்தும் தெரிந்த ஒரு நல்ல நடிகர்.

எனக்கு விஜய்யின் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அதற்கு பிறகு அருண்விஜய்யின் டான்ஸை மிகவும் ரசிக்கிறேன்.” என்றார்.

 

More Articles
Follows