தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கமீன்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதை பெற்று தந்த இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தரமணி.
இப்படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் சார்ப்பில் சதீஷ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் விளம்பரங்களே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் இது இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் கலாச்சாரம் பற்றி பேசும் படம் என தெரியவந்துள்ளதால் எதிர்பார்ப்பு எல்லை கடந்துள்ளது எனலாம்.
எனவே இளைஞர்களின் பல்ஸ் அறிந்த ஜிகே சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் முன்னணி ஹீரோக்களுக்கு ஒதுக்கும் சிறப்பு காட்சிளை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை போரூர் ஜிகே சினிமாஸ் தியேட்டரில் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது