சென்சார் செய்த வார்த்தைகளை வெளியிட்ட தரமணி டீம்

சென்சார் செய்த வார்த்தைகளை வெளியிட்ட தரமணி டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

taramani posterஇயக்குனர் ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் மற்றொரு புது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்காக தணிக்கை குழு தந்த ‘A’ சான்றிதழை மையமாக வைத்தே இயக்குனர் ராம் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கையாண்டுவருகிறார்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும் படியும்,சென்சார் குழுவால் அனுமதிக்கப்பட்ட வசனங்களை ஊமைப்படுத்தியும் ஒரு புது விதமான,மிகவும் சுவாரஸ்யமான யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குனர் ராம்.

இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’சான்றிதழ் தந்துள்ளதற்கு , படத்தில் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், கதாநாயகனோ மற்ற ஆண் கதாபாத்திரங்களோ மது அருந்தும் படியாகவும் சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களாக காண்பித்தாளல் அது சரி, அதுவே ஒரு கதாநாயகி குடியோ, சிகரெட் பழக்கமோ இருப்பதாக காண்பித்தால் அப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் தருவதுதான் தணிக்கை குழுவின் போக்கு என்பதை இப்பட தயாரிப்பாளர் சுட்டிக்காட்டவே இந்த டீஸர் என கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு நாள்தோறும் நடக்கும் ஈவ் டீஸிங், அதனை இப்பட கதாநாயகி எவ்வாறு துணிச்சலாக கையாள்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இருக்கும் நவீன கலாச்சாரத்தில் வாழும் ஆண் மற்றும் பெண்களின் வாழ்வை உண்மையான பிரதிபலிப்பாக ‘தரமணி’ இருக்கும் எனவும் இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘தரமணி’ ரிலீசாகவுள்ளது.

Taramani movie released Teaser with Censored bad words

துல்கரின் சோலோ படத்தில் 15 பாடல்கள்; 11 இசையமைப்பாளர்கள்

துல்கரின் சோலோ படத்தில் 15 பாடல்கள்; 11 இசையமைப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer solo press meetசினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’.

துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் அறிமுக பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

சோலோ தான் என் முதல் மற்றும் உண்மையான தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம்.

சோலோவை தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது என்றார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குனர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நல்ல படங்களை எப்போதுமே கொடுக்க முனைகிறேன்.

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார்கள். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை எடுப்பது 8 படத்தில் நடிப்பதற்கு சமம்.

என் மூன்று தமிழ் படங்களின் விழாவிலும் மணிரத்னம் சார் இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. நான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்றார் படத்தின் நாயகன் துல்கர் சல்மான்.

2 மொழிகளில் இந்த படத்துக்கு மொத்தம் 30 பாடல்கள். நாங்கள் 1 பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம். துல்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றார் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்.

இப்போது பிஜாய் நம்பியார் காட்டியது தான் படத்தின் உண்மையான முன்னோட்டம். இந்த முன்னோட்டம் அருமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது என்றார் இயக்குனர் மணிரத்னம்.

இந்த படத்தின் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்

Dulquer Salmans Solo movie has 11 music directors with 15 songs

solo press meet

ரஜினியின் மருமகனும் மம்முட்டியின் மகனும் இணைந்த நாள்

ரஜினியின் மருமகனும் மம்முட்டியின் மகனும் இணைந்த நாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On July 28th Dhanush and Dulquer salman celebrating their birth daysசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா ஸ்டார் மம்முட்டி இணைந்து நடித்த படம் தளபதி.

தென்னிந்திய சினிமாவையே கலக்கிய இப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது.

இவர்கள் ரீல் லைஃப்பில் இணைந்தனர்.

இந்நிலையில் ரஜினியின் மருமகன் தனுஷ் மற்றும் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஆகியோர் இன்று ரியல் லைப்பில் இணைந்துள்ளனர்.

அதாவது தனுஷ் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இன்று சென்னையில் நடைபெற்ற சோலோ பட பிரஸ் மீட்டில் தன் பிறந்தநாளை கொண்டாடினார் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் இயக்குனர்கள் மணிரத்னம் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

On July 28th Dhanush and Dulquer salman celebrating their birth days

விவேகத்தை முந்தி கபாலியை நெருங்கிய மெர்சல்

விவேகத்தை முந்தி கபாலியை நெருங்கிய மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Mersal Kerala rights bagged by Global united Mediaதமிழ்நாட்டை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே விஜய்யின் சமீபத்திய படங்களில் மலையாள மணம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் மெர்சல் வியாபாரமும் மணக்க ஆரம்பித்துள்ளது.

கேரளா தியேட்டர் உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டதையடுத்து, குளோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம் பெற்றுள்ளதாம்.

இத்தகவலை இப்படத்தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது ரூ- 7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கபாலியின் கேரளா உரிமையை மோகன்லால் ரூ. 7.5 கோடிக்கு வாங்கியிருந்தார்.

விவேகம் உரிமை ரூ. 4.2 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Mersal Kerala rights bagged by Global united Media

மதம் மாறிய மகளே என்ஜாய்… அக்ஷராஹாசனுக்கு கமல் ட்வீட்

மதம் மாறிய மகளே என்ஜாய்… அக்ஷராஹாசனுக்கு கமல் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal on rumours of Aksharahassan changing her religionஎன் அப்பாவை போன்று நானும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தான் என கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராஹாசன் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவருடைய பேட்டியில் கடவுளை நேசிப்பவர்களை மதிப்பேன். எனக்கு புத்தமதம் பிடிக்கும்.

அது வாழ்வியலோடு கலந்துள்ளது. அதில் நிறைய விஷயங்களை கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்து இருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து மகளின் பேட்டிக்கு கமல் தன் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில்..

“ஹாய்! அக்‌ஷு… நீ மதம் மாறி விட்டாயா? உனக்கு எனது அன்பு. அதற்காக உன்னை வாழ்த்துகிறேன். சிறப்பாக வாழ். லவ் யு பப்பு” என பதிவிட்டுள்ளார்.

Kamal on rumours of Aksharahassan changing her religion

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religeon is unconditional. Enjoy life . Love- Your Bapu

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mani Ratnam and Vijay Sethupathiகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து தன் புதிய படத்திற்கான வேலைகளை ணிரத்னம் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வத்துடன் விஜய்சேதுபதி இருப்பதாகவும் அதற்காக தன் கால்ஷீட்டுக்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

எனவே விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows